பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 & செளந்தர்ய.

இந்த சிரமம் நம் பெண்டிர் தாங்கமாட்டார்கள். ஒரு வேளை சமையல்தான். இரவு சாதம் புதிதாக வடிப்பதோ அல்லது மத்தியான சோற்றைச் சுடவைப்பதோ அத்தோடு சரி. அவர்களுடைய T.V. தொடர், குமுதம், விகடன் கவலையில் ராச்சமையல் எண்ணமே ஏது? இத்தனை ஏழ்மையிலும் உழைப்பிலும் ஒரு முழம் பூவுக்காக விசாலத்தின் உற்சாகம் என்னை வெட்க வைக்கிறது. காசை வீசி எறிஞ்சால்- என்று சொன்ன அவசரத்துக்கு தலை குனிகிறேன்.

நான் கவனித்தவரை, நெசவாளர்கள் அநேகமாக முருக பக்தர்களாக இருக்கிறார்கள். பூர்வீகத்தில் இவர்கள் வீரபாகு முதலிய நவவீரர்கள் கத்தி வீச்சிலிருந்து நாடாவீச்சிற்கு எப்போது எப்படி மாறினார்கள்? குருவிக்கார ஜாதி, தேசிங்குராஜன் பரம்பரை இதெல்லாம் எனக்கும் இன்னும் மர்மம்தான். ஆனால், புராண, காவிய ஞானம் எனக்கு எப்பவுமே ஆட்டம் கண்டதுதான். என்னால் சாகூவிக் கூண்டு தாங்கமுடியாது. அதற்கே நான் லாயக்கற்றவன்.

தவங்கிடந்து தேடிச்செல்லும் தரிசனத்தைவிடத் தற்செயலில் தன்னைக் காட்டிக்கொள்ளும் ப்ரத்யக்ஷம்தான் மஹத்தானது. நம்மிடம் அது ஏமாந்து போய் அதன் ஸ்வய ரூபம் தோலுரிந்து போய்விட்டதாக நாமே ஆச்சர்யமுறுமாறு அந்தத் தாக்கம் நம்மைக் காலைவாரிவிடும். இது நம்முடைய குறையே அன்றி அழகுக்கு என்றுமே பழுது கிடையாது. அதன் நிரந்தரத்தை நாம் உணராதிருப்பது நம்மைத்தான் அம்பலப்படுத்துகிறது.

அந்த சமயம் நாம் ஆண் பெண் உறவில்தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று இல்லை. சென்றுபோன