பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 • * செளந்தர்ய.

ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிரு. வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம்?

என் எழுத்தின் ஆக்க நாட்களில், நான் எழுதாத நேரங்களிலும்கூட, என் காலைக்கடன்களின் போது சாப்பிடும் நேரம், இன்னும் சம்பந்தா சம்பந்தமற்ற வேளை களிலும், ஏதேதோ வார்த்தைக் கோவைகள் உற்பத்தியாகித் தம்மைத்தாமே திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் என்னை அறியாமல் வெளியே உளறிக் கொட்டியிருக்கிறேன்.

"ஆமா. நம்மாத்தில் தனக்குத்தானே பேசிக்கொள்ளறது பழக்கம்தான். அதுக்காக இது என்ன பேத்தல்?” பதில் சொல்ல முடியாமல் வழிவேன். பீஷ்மனின் வில்லாற்றலில் அஸ்த்திரங்களின் சரமாரியில் வானமே இருண்டு கொண்டதாம். அதுபோல்தான் சொல் சரங்கள் ஆரம்பத்தில் கவிந்துகொள்கின்றன. ஆர்வம் அனுபவத்தில் பதமாகி அவையவை தம் இடத்தைத் தேடிப் பதிந்து இல்லைஇன்னும் கண்டுகொண்டேயிருக்கின்றன- என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்.

என் பேரக்குட்டி- இப்பத்தான் நாலு முடிஞ்சுது. திடீர் திடீரென சுவருடன் கோபித்துக் கொள்கிறான்.

“டேய். என்னடா நெனைச்சுண்டிருக்கே? நிறுத்து. டீச்சர் கிட்டே சொல்லிடுவேன். நம்மதா (நர்மதா) டீச்சர்கிட்டே சொல்றேன். ஆமா!”

அவன் புருவங்கள் நெரிகின்றன. உதடுகள் மொக்கு கட்டுகின்றன. அழகாயிருக்கிறான். என் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவன் வரை அவன் கோபம் நிஜம்.