பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

லா. ச. ராமாமிருதம் : 83

‘மாமி. நீங்கள் கேட்கவும் வேணுமா? இதுவே எங்களுக்குப் பெருமையில்லையா?”

"அப்படியில்லே. நான் முறையா கேக்கணுமில்லையா, உங்கள் கோயில் காரியத்துக்குக் குந்தகமாயிருக்கக் கூடாதில்லையா?”

“ஒரு தடங்கலுமில்லை. நான் கவனிச்சுக்கறேன். இந்தக் குட்டி எவ்வளவு செய்ய முடியும், இப்போ வெட்டி முறிக்கறா மாதிரி கோயில் விசேஷங்கள் ஒண்ணுமில்லை. தாராளமா அழைச்சுண்டு போங்கோ'

வழியனுப்ப மாமியார் வாசலில் நிற்க, நாட்டுப் பெண் ஒரு புடவையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள்.

அம்மாவுக்குப் பெரிய வயது ஆகிவிடவில்லை. ஆனால் இப்பவே கம்பீரம் வந்துவிட்டது.

இந்த ஊர்பாங்கு நன்றாய்த்தானிருக்கிறது. நாங்கள் போவது நடுத்தெரு. நேரே எங்கள் வீட்டில்போய் முட்டும்.

வடக்குத் தெரு கோடி குசவர் தெரு மேட்டுக்கு வளைந்து, விரிந்து இன்னும் நடந்தால் வள்ளுவப் பாக்கத்தைக் கடந்து மேற்குக்கோடி மூலையில் வாய்க்கால் தாண்டி இன்னும் சற்று நட. அதோ பச்சையம்மன் கோயில் எல்லை தேவதை. மூர்த்தி சின்னதுதான். ஆனால் உக்ரஹம் எதிரே இரண்டு ராrச ஆண், பெண் பொம்மைகள். ஆளுக்கொரு கத்தி அவர்களின் காத்திரத்துக்குக்கேற்றபடி, நெட்டுக்குத்தாய் வைத்துக்கொண்டு அம்மனைக் காவல் காக்கிறார்கள். அவர்கள் பின்னால் இரண்டு ராrசக் குதிரைகள்