பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 65

"ஆமாம், மாமி நான் அவருக்கு கொண்டுபோய்க் கொடுக்கவா?”

"அவர் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. பல்விளக்கி, சுதாரிச்சுக்கணும்.”

“சரி, மாமி. நான் என்ன செய்யனும்? உலைநீர் ஏற்றவா?

'நீ ஒண்ணும் செய்யக்கூடாது. சும்மா உட்கார்ந்திண்டுரு. இல்லாட்டா ஆனந்தவிகடன் படி பழசுதான். ஒண்ணு ரெண்டு கிடக்கும். பசிச்சா மூலையிலே ஒரு கை பழையது இருக்கு தயிர் ஊத்தறேன். சாப்பிடு இட்டிலிக்கு மத்தியானம் நனைக்கலாம்.”

‘மாமி இந்தக் குருக்கள் கும்பலுக்கே பசி வேளையே கிடையாது. மத்தியான நிவேதனம் வந்துதான் சோறே!” கைகொட்டிச் சிரித்தாள். "இட்டிலிக்கு நான்தான் அரைப்பேன்.”

'இப்போ அதைப்பத்தி என்ன தர்க்கம்? பெண்ணே இதபார். அங்கிருந்து இங்கே உன்னை வேலைவாங்கக் கொண்டு வரல்லே. ரெஸ்டாயிரு. பெண்ணாப் பிறந்துட்டு வேலைக்கென்ன குறைச்சல்? சரி, ஏதாவது பேசுவோம். உனக்கு எத்தனை உடன்பிறந்தார்மார்?”

- பேசிக்கொண்டே அம்மா களைவதற்கு முன் அரிசி யைக் கல், நெல் பொறுக்க ஆரம்பித்துவிட்டாள் விசாலம். "பாத்திரம் எது? எவ்வளவு தண்ணிவைக்க இல்லே மாமி. முறைக்காதீங்கோ, மறந்துபோச்சு.”

தவடையில் ஒரு கையால் மாறிமாறி

'அடி அசடே அதெல்லாம் வேண்டாம். சரி சொல்லு உடன்பிறந்தாமார் எத்தனை?”