பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் * 69

“எனக்கே ஊரைவிட்டு வந்தப்புறம் பதினெட்டு வயசுக் கப்புறம்தான் காபிப்பழக்கம். அவருக்கு இருபத்திமூணுக் கப்புறம் முன்னால் தெரியாது. இங்கே பால் நன்னாயிருக்கு. அவருக்கு குளிருக்கு இதவா அவசியமாயிடுத்து.”

“உங்க காபி எல்லாம் சேறாட்டம். நமக்கு ஜரிமானம் ஆகாது.” -

அந்த நாட்கள், அந்த மக்கள், அம்மா குரல் மந்திரமிடு கிறது. விசனமாகத் தெரியவில்லை. ஏதோ விரக்திதான் தெரிகிறது. நினைவில் அவை, அவர்கள் பவனி வந்து போகையில் அந்தச் சமயத்துக்கு நாம் அவர்களுடன்தான் வாழ்கிறோம். அவர்கள் இங்கு வரவில்லை. வர மாட்டார்கள். பரமபதசோடான படம். பெரிய நீண்ட ஏணி. ஒரு சாயந்திரம் வைத்தி வந்திருந்தான். அந்தப் பக்கம் ஒரு பிள்ளையார் கோயிலிலும் சாயந்திரம் விளக்கேற்றி வைக்கும் முறையாம்.

அகமுடையாள் நினைப்பு வந்துட்டுதா? "அப்படிச் சொல்ல முடியுமா? குருக்கள் ஜாதியில் ரெண்டு பேருமே கோயிலுக்கு வாழ்க்கைப்பட்டவாதான். பெரியகோவிலானால் நிறைய முறையிருந்தால் ஆபீஸ் மாதிரி நடக்கும். குருக்கள்மார் கூட இருப்பா. சின்னக் கோவில் ஜகா வாங்கிடும். ஆம்படையாள் நினைப்பு இல்லேன்னும் சொல்ல முடியாது. ரெண்டுபேரும் சேர்ந்து செய்யறோமில்லையா? நைவேத்யம் அவதானே. மடி, ஆசாரம், சிரத்தைன்னு தனியா சாமி அலங்காரத்துக்கு, நைவேத்யத்துக்கே வந்துடறது. ஏதோ நறுவிசா செய்யறோம்னு திருப்தியாத்தானிருக்கு”

"வைத்தி சாப்பிட்டுப் போயேன். அப்பா அம்மா காத்திண்டிருப்பாளா?”