பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 : செளந்தர்ய.

இவள் மாமியார் வீட்டுக்கு வந்தாச்சு. என்னவோ தோனித்து. இவளுக்குக் கொஞ்சநாள் பிறந்தகம் கொண்டாடினேன். அவள் சந்தோஷத்தில் நானும் ஒரு பங்கு அனுபவித்தேன். கிழவி சரியாத்தான் சொன்னாள் கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை. அண்ணா தலையெடுத்த பின்புதான் வீட்டில் சிவராத்ரி, ஏகாதசிப் பட்டினிகள் குறைஞ்சு அப்புறம் அறவே நின்னுபோச்சு.

அம்மாவின் புன்னகை துக்கத்தினும் வேதனையா யிருந்தது. எனக்குக் கண் துளும்பிவிட்டது. அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன்.

"அம்மா என்னை மன்னிச்சுடு. ஏதோ பழசை எல்லாம் கிளறிவிட்டேன்.”

“கிளறுவதென்ன, நீயும் ஒருநாள் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே! ஆனால் எங்கள் கஷ்டமெல்லாம் மறுசந்ததி நீங்கள் படனுமா?”

ஆனால் இந்தப் பாழாய்ப் போன வேலை ஒண்ணு கிடைக்கமாட்டேன்ங்கறதே.

ஒரு மாலை வைத்தி வீட்டிற்குப் போனால் வைத்தி விசாலம் இருவரையுமே கானோம். விசாரித்ததில் சுந்தராம்பா சொன்னாள்: "இங்கிருந்து பத்துகல் தூரத்தில் வாடாதவூரில் சிவன் கோவிலைப் பார்த்துக்கொள்ளப் போய்விட்டார்கள்.”

'சொல்லிண்டு போகாமல்கூடப் போய்விட்டார்களே?”

'அந்த தர்மகர்த்தாக்கள் அப்படித்தான். காலில் கஞ்சியை வடித்துக் கொண்டு வந்தாங்க. இன்னிய