பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 * செளங்கர்ய.

تس من

அவளை அப்படிக் கேட்கும்போது என் வயது அறுபது.

“உனக்கு என்ன வருமானம்?”

அவள் பரிவட்டத்தில் பட்டு நூலை நூத்துக்கொண்டே “வருமானமா? எனக்கேது? வாராவாரம் காஞ்சீபுரம் போய்வரேனே. அந்த முழம் மல்லி. நீங்க மஞ்ச குங்குமத்துக்கு வருஷத்துக்கு மூணுதடவை அனுப்பlங்களே அதுதான்.”

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.

“வைத்தி ஒண்ணும் கொடுக்கமாட்டானா?”

"அவருக்கு அந்தப் பழக்கமில்லை. சேர்த்து வெச்சு வட்டிக்கு விடுவார். அவள் குற்றமாய் சொல்லவில்லை. "இப்ப இந்த கோரா நூற்கறேன். இதுவும் வீட்டுக்குத்தான் அவள் பேச்சில் வருத்தமுமில்லை சந்தோஷமுமில்லை.

“வருஷத்துக்கு ரெண்டு புடவை, சாப்பாடு, பலகாரம் இதுதான் நான் கண்டது. இதுக்குமேல்தான் என்ன வேணும்? இந்த வீடுதான் என் வீடு. சொந்த வீடு”

இது ஒருமாதிரியான அநாதை நிலை. அநாதைக் குரல்.

அம்மா இவளிடம் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் ஆச்சர்யம் இல்லை. பெண்கள்பாடு. அதில் எப்போதுமே ஒரு சோகம். சோகத்தின் கவித்வம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. தாய் வீட்டைத் துறந்து கணவன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். தாய்மை அடைந்ததும் இன்னும் தனி ஆகிவிடுகிறார்கள். இயற்கையும் அவர்களை மனரீதியாகவும், தேகரீதியாகவும் பக்குவப்படுத்தி விடுகிறது. சுயநலமும் ஆன்மிகமும் எதிர்மறைகள் கலந்த ஒரு நிலையை அடைந்து விடுகிறார்கள். ஆச்சர்யம்தான்.