பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 95

ஆனால் கையில் செயல் இல்லை. முருகன் எப்படி கண் திறக்கப் போகிறானோ? அவன் அதிகம் ஆசைப்படுகிறவன் இல்லை.

ஹைமாவதி- அவளுக்கு எப்படித் தெரிந்ததோ ஜாடை யாக என்னிடம் தெரிவித்தாள். எனக்கு வாயிலிருந்து வார்த்தைகள் குதித்துவிட்டன. அதற்கென்ன நாம் செய்து விடுவோம். ப்ட்டுப்புடவை எடுக்க முடியாவிட்டாலும் ஒரு நல்ல புடவை, அவனுக்கு ஒரு வேட்டி, அங்கவஸ்திரம், நம்மால் முடிந்தது ஒருகால் பவுனில் தாலி, ஹைமாவதிக்கு சம்மதமே. நான், என்ன காரணமோ தெரியவில்லை, முகூர்த்தத்துக்குப் போக முடியவில்லை. என் மனைவி வெற்றிலைப் பாக்கு பழம், பருப்புத் தேங்காய் சீருடன் சென்றாள். இரண்டாம் நாளே அவளை அவ்வளவு சுருக்க நான் எதிர்பார்க்கவில்லை. நான் என் அறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். விசாலம் அறையுள் வந்தாள்.

‘மாமியும் நீங்களும் சேர்ந்து நில்லுங்க”

எங்களை நமஸ்கரித்தாள். எப்படியும் இரண்டாம் திருமாங்கல்யத்திற்குத் தனிப்பொலிவு இருக்கத்தான் செய்கிறது. அதில் அவள் தன் மறுமலர்ச்சியில் முதிர்ச்சியின் அழகில் ஒளிர்ந்தாள். அப்பவும் வைத்தியால் வரமுடிய வில்லை.

窦 窦 裘

எனக்கு இனி அதிகம் நடமாட்டம் இல்லை.

路 窦 窦

ஒரு சமயம் குற்றாலத்திற்குப் போயிருந்தேன். இது முதல் சமயம் அன்று. மூன்று நான்கு தடவை போயிருக் கிறேன். நான் போன கடைசி சமயத்தைக் குறிப்பிடுகிறேன்.