பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் * 97

தென்காசி இல்லை இது. வந்து போகும் ஜனத்தொகை (floating population) (poradflapsth 16535 & 11 u%55&pg|. சீஸனில் மூன்று மாதங்களையொட்டி 3 Star ஒட்டல்களுக்கு இணையாக தங்கும் விடுதிகளும், ஒட்டல்களும் இப்போது ஏகமாய் முளைத்துவிட்டன. கோயில் புனருத்தாரணுக்குப் பின் கூட்டம் எக்கச்சக்கம்.

அறை எடுத்த முதல் நாளே, உணவில் காரம் தாங்காமல் எனக்கு வயிற்றுப் போக்குக் கண்டு, காலும் கையும் ஒய்ந்து விட்டன. அவை ஏற்கெனவே பலவீனம். விழுந்துவிடுமோ? மாலை கோயிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். மெனக்கட்டுப் பழைய இடங்கள் பார்த்துப் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, கோயிலுக்குப் படியேறுமுன்- பக்கவாட்டில் கட்டியிருக்கும் யானைச் சவாரி பண்ணி கடைகண்ணி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எனக்காக அதையெல்லாம் விட்டுவிட முடியுமா? நியாயமுமாகுமா? என்னைத் தனியாக அறையில் விட்டுச் செல்லவும் பயம். ஏதேனும் எனக்கு நேர்ந்து விட்டால் "ஒரு வேளை சமாளியுங்கள் அப்பா!' காயத்ரி கண் துளும்பாத குறை. பட்டுப்புடவை கட்டிக்கொண்டு அம்மாவும் பெண்ணும் வந்திருக்கிறார்கள். இருவர் கொண்டையிலும் பூச்செண்டுகள் இளநீர்க்கனம். பையன்கள் ஆளுக்கொரு கேமராவுடன். பூரீகாந்த் வீடியோ வேறே. கூட்டத்தில் அலையறான்கள்.

கோயில் வாசப்படியில் திவாகரிடம் சொன்னேன். “எனக்கு வேளை வரும்போது ஒருபக்கம் நீதான் தூக்கணும்.”

'நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கண்டிப்பாய்த் துக்குவேன்.”