பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 83

அடி முதல் முடி வரையில் வைரங்களே இழைத்த நகைகளையும் அணிந்திருந்ததன்றி, அவர்களுள் மூத்தவள் ஊதா நிறச் சேலை ரவிக்கை முதலிய ஆடைகளையும், இளையவள் சிவப்பு பனாரஸ் சேலை முதலிய ஆடைகளையும் அணிந்திருந்த அலங்கார வேறுபாடு ஒன்றே அவர்கள் வெவ்வேறான இரண்டு மங்கைகள் என்பதைக் காண்பித்தது. அந்தப் பெண்மணிகளின் உத்தமமான தேக அமைப்பையும், முகவனப்பையும் அலங்காரச் சிறப்பையும் கண்டு கரை கடந்த மகிழ்ச்சியும், மனவெழுச்சியும் ஆநந்தமும் அடைந்து திகைத்து நின்ற கற்பக வல்லியம்மாளைப் பூஞ்சோலையம்மாள் அன்பாகவும், தற்பெருமையாகவும் நோக்கி, “அந்த இரண்டு குழந்தைகளுடைய உயிரையுந்தான் தங்களுடைய புத்திரர் நேற்றையதினம் காப்பாற்றி எங்களு டைய குடும்ப விளக்கை ஏற்றி வைத்தது' என்று கூறிய வண் ணம் தனது செல்வியர் இருவரையும் சுட்டிக் காட்ட, உடனே கற்பகவல்லியம்மாள் முன்னிலும் அதிகரித்த குதுரகலமும், பூரிப்பும் அடைந்து, மிகுந்த வாத்சல்யம் சுரந்த முகத்தினளாய், 'இவர்களைப் பார்த்த உடனே, நானும் அப்படித்தான் நினைத்தேன். தங்களுடைய முகச்சாயலைப் போலவே இவர்க ளுடைய முகச்சாயலும் இருப்பதால், இவர்கள் இன்னார் என்பதை முகமே சொல்லுகிறது! இவர்களையெல்லாம் நேற்றையதினம் என் மகனா காப்பாற்றினான்? மனிதரைப் படைப்பதும், காத்து ரகசிப்பதும் கடவுளுடைய தொழிலல்லவா! தங்கப் பதுமைகள் போல இவர்களை சிருஷ்டித்து இதுகாறும் வளர்த்துக் காத்து இந்த ரூபத்தில் வைத்திருக்கும் அந்த சர்வேசுரன் இவர்களுடைய விஷயத்தில் அப்படிக் கொடுமை யாக நடந்து இவர்களுடைய உயிருக்குத் தீங்கு செய்திருப் பானானால், அவனுடைய கைவேலைக்கு மதிப்பில்லாமலும், அர்த்தமில்லாமலும் போய்விடாதா ஒரு நொடியில் இந்தக் குழந்தைகளை அழித்து விட அவன் சித்தம் கொள்வானானால் இவ்வளவு அருமையாக ஏன் இவர்களை சிருஷ்டிக்க வேண்டும்? அவன் அப்படிச் செய்ய பைத்தியக்காரனல்ல. கடவுள் ஏதோ கருத்தை மனசில் வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு காரி யத்தையும் நடத்தி வைக்கிறான். தங்களுடைய பங்களாவுக்குப் பக்கத்தில் இருப்பவர்களான எங்கள் மேல் தங்களைப் போன்ற