பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 85

வல்லியம்மாள் தனக்கு அருகில் வந்து நின்ற செளந்தரவல்லியை மிகுந்த மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டி, "இந்தக் குழந்தைதான் தங்களுடைய மூத்த குழந்தையோ? இதன் பெயரென்ன?” என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம் மாளை ஒரிடத்தில் உட்கார வைத்து, "இந்தக் குழந்தைதான் என்னுடைய இளைய குழந்தை! அதோ நிற்கிறதே அதுதான் மூத்தது. அதன் பெயர் கோகிலாம்பாள், இதன் பெயர் செளந்தர் வல்லி. ஆனால் இவர்களோடுகூட எப்போதும் இருந்து பழகும் எனக்கே, ஒவ்வொரு சமயத்தில் இவர்களுடைய வித்தியாசம் தெரிகிறதில்லை. தங்களைப் போன்ற புதிய மனிதர்களுக்கு எல்லாம், அது சுத்தமாகத் தெரியவே தெரியாது. இரண்டு குழந் தைகளும் இரட்டையாகப் பிறந்தபடியால் இப்படி ஒரே சாயலாக இருக்கின்றன” என்றாள். -

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த களிப்பும், வியப்பும் அடைந்து, "ஆம், தாங்கள் சொல்வது நிஜம்தான். குழந்தைகள் இரண்டும் ஒருவர் போலவே இருக்கிறார்கள். என்னவோ ஈசுவரனுடைய செயல் எப்படி இருந்தாலும் பரவா யில்லை. அவரவர்கள் செளக்கியமாகவும், மங்களகரமாகவும் ஆயிரங்காலம் வாழ வேண்டியது ஒன்றே முக்கியம்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்து முடித்தாள். அப்போதும் கோகிலாம் பாள் வாயைத் திறவாமல் அடங்கி ஒடுங்கி, அங்குமிங்கும் போய், விருந்திற்கு ஆக வேண்டிய ஒரு சில விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். செளந்தரவல்லியோ, கற்பகவல்லி யம்மாளின் அண்டையில் போய் நின்று, 'தங்களுடைய புத்திரரும் வந்திருக்கிறார்களா?' என்று கேட்க, உடனே பூஞ்சோலையம்மாள், “என்ன கேள்வி இது? அவர்களுடைய குமாரர் வராமலா விருந்து நடக்கும். அவர் வந்து அடுத்த மகாலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நம்முடைய சம்பந்த மூர்த்தி அவரை வரவேற்று, அவரிடத்தில் பேசிக் கொண்டி ருக்கிறான்” என்று மறுமொழி கூறிவிட்டுக் கற்பகவல்லியை நோக்கி, “உள்ளே இலை போட்டிருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வருகிறேன். கொஞ்சம் உத்தரவு கொடுங்கள்” என்று கூற,

கற்பகவல்லியம்மாள், ஒ, போய்விட்டு வாருங்கள். நான் தங்