பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 87

லாம்பாளைப் பார்க்காமல் போய்விட நேருமே என்ற நினைவும் ஏக்கமும் அடைந்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

ஸ்திரீகளின் விடுதியிருந்த பக்கத்தில் ஜன்னல்கள் இருந்தனவானாலும் அவற்றின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தான் ஏதாவதொரு ஜன்னலின் அண்டையில் உட்கார்ந்து அதிலிருக்கும் இடைவெளியால் அப்புறத்தில் பார்த்தாகிலும், கோகிலாம்பாளை எப்படியேனும் அன்றைக்குள் ஒருமுறை பார்த்து ஆநந்திக்க வேண்டுமென்ற உறுதி அவனது மனதில் உண்டாயிற்று சம்பந்தமூர்த்தி அப்போதைக்கப்போது கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கண்ணபிரான் தனது நினைவை யெல்லாம் வேறிடத்தில் வைத்துக் கொண்டு தாறுமாறான மறுமொழி கொடுத்துக் கொண்டு வந்தான்.

அவ்வாறு அரைமணி நேரம் கழிந்தது. எல்லோரும் விருந்துண்ண எழுந்தார்கள். இரண்டு விசாலமான கூடங்களில் தலைவாழையிலைகள் போடப்பட்டு, முப்பழங்களும், அறுசுவை உணவுகளும், பக்ஷண பலகாரங்களும், நெய்யும், தேனும் அபரி மிதமாகச் சொரியப்பட்டிருந்தன. ஆண்மக்கள் ஒரு கூடத்திலும், பெண்பாலார் மற்றொன்றிலும் உட்கார்ந்து விருந்துண்ணத் தொடங்கினர். ஏராளமான பணிமக்கள் சகலமான பதார்த்தங் களையும் மேன்மேலும் கொணர்ந்து பரிமாறி புத்துருக்கு நெய்யை மழைப்போலப் பொழிந்து, வடை, பாயாசம், லட்டு, ஜிலேப்பி, ஹல்வா முதலிய மாதுரியமான பொருட்களையும், தேங்கா பன்னம், மாங்காயன்னம், வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல் முதலிய ஏழெட்டு வகைச் சித்திரான்னங்களையும் கொணர்ந்து கொணர்ந்து கவிழ்த்து, விருந்துண்போர் அனைவரும் போதும் போதும் என்று கதறும்படி செய்ததன்றி, முடிவில் அவர்களுள் சிலரைக் கைகொடுத்துத் தூக்கிவிடும்படிச் செய்து விட்டனர். ஆனால் நமது கண்ணபிரானொருவனே ஒரு கவளமேனும் வாயில் போடாமல், பார்வையிலேயே திருப்தியடைந்து, வென்னிரை மாத்திரம் வரவழைத்து இரண்டு மூன்று பாத்திரம் பருகி விட்டு எழுந்தான். அவன் காதல் பிணியான கொடிய மன நோய்க்கே இரையாகிப் பெருந்தீயினால் கருகும் வாழைக்குருத்து போல துவண்டு தத்தளித்துக் கொண்டிருந்தான். அவன்