பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

செளந்தர கோகிலம்



கொஞ்சமும் உண்ணவில்லையென்பதைக் கண்ட பணிமக்கள் தங்களால் இயன்ற மட்டும் வற்புறுத்தி உபசரித்துப் பார்த்த தெல்லாம் பயனற்றுப் போயிற்று. அவ்வாறு அந்த போஜனம் நிறைவேற. யாருடைய பொருட்டாக அவ்வளவு சிறப்பான விருந்து தயாரிக்கப் பெற்றதோ அவர் நீராகாரத்தைத் தவிர, வேறொன்றையும் தீண்ட முடியாமல் போயிற்று. அவரது பெயரைச் சொல்லி மற்ற எல்லோரும் சம்பிரமமாக விலாப் புடைக்க விருந்துண்டு களித்தனர். கற்பகவல்லியம்மாள், தேக அசெளக்கியத்தோடு இருக்கும் தனது புத்திரன் போஜனம் செய்கிறானோ இல்லையோ என்ற நினைவும், கவலையும் கொண்டவளாய், சொற்ப ஆகாரமே உட்கொண்டாள்; பூஞ்சோலையம்மாளும் மற்றவரும் அடிக்கடி வருந்தி உபசரித்தது பற்றி அந்த அம்மாளுக்கு அரை வயிறு நிறைந்தது என்று சொல்ல லாம். அவ்வாறு விருந்து முடிய, எல்லோருக்கும் சந்தனம், தாம்பூலம் முதலியவை வழங்கப் பட்டன. கற்பகவல்லியம்மாள், கைம் பெண்ணாதலாலும், கண்ணபிரான் பிரம்மசாரியாத லாலும், அவர்கள் சந்தனத்தைக் கண்ணால் பார்த்துத் தாம் பூலத்தைக் கையால் தொட்டார்கள். ஆகையால் அந்த விருந்தில் தாய்க்கும், பிள்ளைக்கும் அந்தப் பங்களாவிற்கு வந்து போஜன சாலையில் இலையில் உட்கார்ந்து எழுந்த சிரமமொன்றே கிடைத்தது. அப்படியிருந்தும் கண்ணபிரான் தனது மன நிலையை வெளியில் காட்டாமல் நிரம்பவும் சந்தோஷமாக இருப்பவன்போல் நடந்து கொண்டான். கற்பகவல்லியம்மாளும், எவ்வித சந்தேகத்திற்கும் இடங்கொடாமலேயே பூஞ்சோலை யம்மாள் முதலியோரிடத்தில் நடந்து கொண்டு மிகுந்த குதுகலத்தைக் காட்டி வந்தாள். உண்மையில் விருந்துண்ட மற்ற எல்லோரும் தங்களது வயிற்றைத் துரக்கிக் கொண்டு போக மாட்டாமல் இரை விழுங்கிய மலைப்பாம்புகள் போல அங்கங்கே விழுந்து புரண்டனர். சிலர் குறட்டை விட்டுத் தூங்கினர். சிலர் அந்த விருந்தின் சிறப்பைப் பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர், "அதில் உப்பதிகம். இதில் புளி குறைவு, இன்னொன்றில் சூடில்லை” என்று பலவாறு ஷராக்கள் பேசினர். ஆனால் மொத்தத்தில் விருந்து முதல்தரமானது என்றும், ஆனால் அதற்குத் தகுந்தபடி தங்களுக்கு வயிறொன்றே