பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

செளந்தர கோகிலம்



அடுத்த நிமிஷத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அது இருக்கட்டும், பகல் போஜனம் முடிந்து நிரம் பவும் நேரமாகிறது, உங்களுடைய குமாரருக்குப் பலகாரங்கள், காப்பி முதலியவைகளை வேலைக்காரிகளிடத்தில் கொடுத்து அனுப்புகிறேன். அவர் ஒருவேளை வெட்கப்படுவார். நீங்களும் கூட இருந்து, அவர் கொஞ்சமாவது சாப்பிடும்படி செய்ய வேண்டும்" என்று நயமாக மொழிந்தாள். அதைக்கேட்ட கற்பக வல்லியம்மாள், “அதைப்பற்றி நானே அவனை இப்போது கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அவனுக்கு உடம்பு இன்னமும் சரியான நிலைமைக்கு வரவில்லை. மத்தியானம் கூட் அவன் அதிகமாக எதையும் சாப்பிடவில்லையாம். அப்படி இருந்தும், அவனுக்கு இன்னும் பசி என்பதே உண்டாகவில்லையாம். தோட்டத்தில் போய் கொஞ்சம் உலாவிவிட்டு வந்தால், ஒரு வேளை உடம்பு சரிப்படுமோவென்று பார்ப்பதாகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறான். ஆகையால், இப்போது அவனுக்கு எதையும் அனுப்ப வேண்டாம். தோட்டத்திலிருந்து வந்த பிறகு வேண்டுமானால், பார்த்துக் கொள்ளுவோம்” என்றாள்.

பூஞ்சோலையம்மாள், "சரி, அப்படியானால், நீங்களாவது கொஞ்சம் பலகாரம் சாப்பிடுங்கள். உங்களை நான் இந்தக் கட்டி டங்களுக்குள் அழைத்துக் கொண்டு போய் எல்லா இடங்க ளையும் காட்ட வேண்டும். வாருங்கள் உன்ளே போகலாம்” என்று கூறி உபசரித்து கற்பகவல்லியம்மாளை அழைத்துக் கொண்டு உட்புறத்தில் சென்றாள். கற்பகவல்லியம்மாளும், கண்ணபிரானும் அவர்களுடைய ஜாகைக்கு அப்போதே போகாமல் மறுநாள் வரையில் தங்களது பங்களாவிலேயே இருக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த கோகிலாம்பாளும், செளந்தரவல்வியும் மிகுந்த மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்தனர். ஆனாலும், கோகிலாம்பாள் தனது மன நிலைமை இன்னதுதான் என்பதை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்; செளந்தரவல்லி தனது இயற்கைப்படி தன் மனதில் எழும் உணர்வையோ நினைவையோ மறைக்கமாட்டாதவளாய் உடனுக்குடன் வெளியிட்டு வந்தாள். பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம்மாளுக்குச் சிற்றுண்டிகள் வழங்கி, அந்தப் பங்களாவின் மாட கூடங்களையெல்லாம் காட்டி அவளைச்