பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 95

சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் கோகிலாம்பாள் இராத்திரி போஜனம் தயாரிப்பதற்குத் தேவையான சாமான் களைக் கொடுக்கச் செய்வதிலும், இன்னமும் தேவையான கிரக காரியங்களை நடத்துவதிலும் கவனம் செலுத்தி, அங்கங்கு போய் உத்தரவுகள் பிறப்பித்து விட்டு, இடையிடையே தனது தாயும் கற்பகவல்லியம்மாளும் இருந்த இடத்திற்குப் போய் அவர்களது சம்பாஷணையின் சாராம்சத்தையும் கிரகித்துக் கொண்டு எல்லாவிடங்களிலும் காணப்பட்டு, ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்ணாயிருக்க வேண்டும் என்பதற்கு இணங்க கருமமே கண்ணாக இருந்தாள். செளந்தரவல்லியோ, தான் பெருத்த தனிகர் வீட்டுப்பெண்ணாதலால், எந்த வேலையையும் தான் செய்வது கெளரவக் குறைவு என்று நினைத்து நல்ல உடைகளை அணிந்து வைர ஆபரணங்களைத் தவிர மற்றவை களைக் கையாலும் தொடாமல், வெல்வெட்டுகள் நிறைந்த திண்டு தலையணைகளில் சாய்ந்து சொகுசாகப் படுத்திருப்பதும், அடிக்கடி சிற்றுண்டிகள், காப்பி முதலியவைகளைத் தருவித்து பல வகைப்பட்ட ஷராக்களோட உண்பதும், இடையிடையே தனது தாயும் கற்பகவல்லியம்மாளும் இருந்த இடத்திற்குப் போய் அவர்கள் பேசும்போது தானும் அதற்கு ஏதேனும் உத்தரமோ யோசனையோ சொல்லிக்கொண்டும் இருந்து பொழுதைப் போக்கினாள். கோகிலாம்பாள் சாதாரணமாக ஏழைக் குடும்பங்களிலுள்ள பதிவிரதா ஸ்திரீயின் உழைப்புக் குணமும், பணிவான நடத்தையும், டாம்பீகமற்ற தோற்றமும், அடக்கமான பேச்சுமுடைய குடும்ப ஸ்திரீயாக இருந்தாள். ஆனால் அவளுக்கு நல்ல கூர்மையான புத்தியும், சமயோசித மான வியவகார ஞானமும், மனிதருக்கு அவசியமாக இருக்க வேண்டிய ஆழ்ந்த யோசனையும் இருந்தன. அதுபோலவே போஜனம் செய்வதிலும், உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு என்ற தன்மை அந்தப் பெண்மணியிடத்தில் இயற்கை யிலேயே அமைந்திருந்தது. அவளோடு கூடவே, நாள் முழுவதும் இருந்து பழகும் மனிதருக்கும் கூட, அவள் எப்போது சாப்பிடு கிறாள் என்பதே தெரியாமல் இருக்கும். அவள் பசி, தாகம் முதலிய எவ்விதமான தேகபாதைகளும் இல்லாத தேவலோகத்து மங்கை போலக் காணப்பட்டதுமன்றி, எல்லா விஷயங்களிலும்