பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 101

அவள் திடீரென்று மறைந்தது அந்த ஈட்டி அவனது உயிரையே பறித்துக் கொண்டு போய்விட்டது போலவும், இருந்தன. அவன் அரைக்கால் நாழிகை நேரம் வரையில் திக்பிரமை கொண் டவன்போலப் பொறிகலங்கி அறிவு குலைந்து தடுமாறி அப்படியே நின்றான். அவள் கோகிலாம்பாளோ, அல்லது செளந்தரவல்லியோ என்ற முதல் சந்தேகமே நீங்காமல் அவனை வதைக்கத் தொடங்கியது. கோகிலாம்பாள் அன்னிய புருஷரிடத்தில் அடக்கமாகவும், ஜாக்கிரதையாகவும்நடந்து கொள்ளக் கூடியவளாதலால்,அவள் தன்னைக் கண்டு நகைத்தி ருப்பாளா என்ற ஐயம் தோன்றியது. இருந்தாலும் ஸ்திரீகளின் மனதை அறிவது கடினம். ஆதலால், ஒருவேளை மற்றவர்களுக்கு எதிரில் கோகிலாம்பாள் எச்சரிப்பாகவும், நாணத்தோடு நடந்தாலும் தான் தனியாக இருப்பது பற்றியும், தான் முதல் நாள் அவர்களது உயிரைக் காப்பாற்றினவன் என்பது பற்றியும், அவ்வாறு தன்னிடத்தில் மாத்திரம் வேண்டுமென்றே அவள் பட்சமாக நடந்திருக்கக் கூடாதா என்ற யோசனையும் தோன் றியது. அதுவும் தவிர, அவளும் மற்ற மனித ஜனங்களைப் போல வெறுப்பு, விருப்பு, சந்தோஷம் முதலியவைகளைக் காட்டும் தன்மையுடைய அறியாத பெண்தானே என்றும், ஆகையால், அவளாக இருந்தால் சிரித்திருக்க மாட்டாள் என நிச்சயிக்க முடியாதென்றும், கண்ணபிரான் தனக்குள்ளாகவே வாத தர்க்கங்கள் செய்து கொண்டான்.

தங்களை நிரம்பவும் வருந்தி அழைத்து விருந்தை நடத்து வதற்கு கோகிலாம்பாளே முக்கிய காரணமானவள் என்பது பூஞ் சோலையம்மாள் அன்றைய காலையில் சொன்ன வார்த்தைகளி லிருந்து தெரிந்ததன்றி, முதல் நாளிரவு முற்றிலும், தன்னைப் போல அவளும் ஊணுறக்கமின்றி நோயிற்பட்டுக் கிடந்து வேதனை அடைந்திருந்தாள் என்பதும் தெரிந்தது, ஆகையால், அவளும் தன் விஷயத்தில் ஏதோ அந்தரங்கமான நினைவைக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு சந்தேகம் அவனது உள்ளத்தில் தலைகாட்டி மறைந்து கொண்டிருந்தது. அவளது அந்தரங்கமான தயையும், பிரியமும் மாத்திரம் தனக்கு இருக்குமானால், தன்னைப்போன்ற மகா பாக்கியசாலி இந்த உலகத்திலேயே எவனும் இருக்க மாட்டான் என்ற எண்ணமும், நம்பிக்கையும்,