பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 109

கற்பகவல்லியம்மாள்: - அப்படியல்ல. சில குழந்தைகள் தாய் வீட்டில் இருக்கும்போது முதலே விவேகமும், அடக்கமும், விநயமும் உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் தாய் வீட்டில் இருக்கையில் எவ்விதப் பொறுப்பையும் உணராமல், தங்களு டைய உடம்பை மெலுக்காகக் காப்பாற்றி, துரும்பு எடுத்துத் துரும்போடு போடாமல் விளையாட்டுப் புத்தியோடு இருக்கி றார்கள். ஆனால், அவர்கள் மாமியார் வீட்டுக்குப் போன வுடனே தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சடக்கென்று மாறிப்போய் அவர்களுக்கு சமமானவர்கள் யாருமில்லையென்று மாமியார் வீட்டாரே புகழும்படியாக நடந்து கொள்ளுகிறார்கள். பெண்கள் இப்படி மாறும் தன்மையை நான் நெடுநாளாக அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட குண முடையதுதான் இந்தக் குழந்தையும் என்று நான் நினைக்கிறேன். இதைப்பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை; எல்லாம் காலக்கிரமத்தில் சரியாகப் போய்விடும்; அது கிடக்கட்டும். எங்களைப் போன்ற ஏழை ஜனங்களுக்குத்தான் இப்படிப்பட்ட கவலை இருக்கவேண்டியது நியாயம். தாங்களோ கோடீசு வரர்கள். தங்களுடைய குழந்தைகள் எப்படிப்பட்ட செல்வாக் கிலும், சுகத்திலும் இருக்கலாம். தங்களுக்கு வாய்க்கும் சம்பந்தம், தங்களுக்குச் சமதையானதாகத்தானே இருக்கும். அப்படி இருக்க இந்தக் குழந்தை போனால், அங்கேயும் இப்படிப்பட்ட சுக போகங்களெல்லாம் இருக்குமல்லவா? இந்தக் குழந்தை நல்ல பெரிய இடத்துக் குழந்தையென்பதும் மெலுக்காக வளர்ந்தது என்பதும் அவர்களுக்குத்தான் தெரியாமல் போய்விடுமா? இந்தக் குழந்தையை அவர்கள்தான் அநாகரிகமாக நடத்துவார்களா? அப்படி ஒரு நாளும் நடக்காது என்று நாம் உறுதியாக நம்பலாம்.

பூஞ்சோலையம்மாள் :- அப்படிச் சொல்லப்படாது. உலகத்தில் பணம் படைத்தவர்கள் எத்தனையோ மனிதர்கள் இருந்தாலும், அவர்களில் துஷ்டர்களும், ஈவிரக்கம் அற்றவர் களும், பிறருடைய யோக்கியதையை உணரமாட்டாதவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்களே பெரிய மனிதர்கள் என்றும், மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுச் சோறுக்காகத் தங்களிடத்தில் காத்திருப்பவர்கள் என்றும் நினைத்து மற்றவரைக் கொடுமையாக நடத்துவது உலக