பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

செளந்தர கோகிலம்



இயற்கை என்னுடைய மூத்த குழந்தையைப் போல இருந் தால், அவள் எப்படிப்பட்ட மனிதருக்கும் சரியாக நடந்து, அவர் களையே தன் வழிக்குத் திருப்பி விடுவாள். அதுவும் தவிர, அவள் உழைப்புக் குணமுடையவள். நல்ல புத்திசாலி, தனக்கென்று எந்தச் சுகத்தையும் நாட மாட்டாள். அப்படிப்பட்டவர்கள் எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. செளந்தரவல்லிக்கு இடுப்புப் புடவையைத் தானே உடுத்திக் கொள்ளத் தெரியாது. ஆகையால் எந்தக் காரியத்துக்கும் அவள் பிறருடைய கைகளையே பார்க்கக் கூடியவளாக இருக்கிறாள்.

கற்பகவல்லியம்மாள்:- (சிறிது யோசனை செய்து) அப்படியானால், ஒரு காரியம் செய்யலாம். கலியாணம் ஆன பிறகு மாப்பிள்ளையை இங்கேயே இருக்கச் செய்தால், அது சரியாகப் போய் விடுகிறது.

பூஞ்சோலையம்மாள்:- நீங்கள் சொல்வது நல்ல யோசனை தான். ஆனால், அதில் இன்னோர் இடைஞ்சல் இருக்கிறது. எங்களுக்கு ஏராளமான சம்பத்து இருக்கிறது. அவைகளுக் கெல்லாம் இந்தக் குழந்தைகள் இரண்டையும் தவிர வேறே வாரிசுகள் இல்லை. இவைகளையெல்லாம் பாதுகாக்து நிர்வகிக்க ஆண் பிள்ளைகள் ஒருவரும் இல்லை. ஆகையால், இவர்கள் இருவருக்கும் கலியாணம் செய்து மாப்பிள்ளைகளை இங்கேயே கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அப்படி இங்கேயே வந்து விட வேண்டுமானால், அந்த மாப்பிள்ளைகள் ஏழைகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் இங்கே வந்திருப்பார்கள். அவர்களும் நம்மைப்போல் தணிகர்களாக இருந்தால், அவர்கள் தங்களுடைய சொத்தையெல்லாம் அலட்சியமாக விட்டு விட்டு இங்கே வந்து நாம் சொல்வதைக் கேட்டு நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இங்கே வருவதாகச் சொல்லி வந்தாலும், கொஞ்ச காலத்தில் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டு போய்விடவே பார்ப்பார்கள். ஆகையால் தணிகர்களுடைய சம்பந்தம் வேண்டுமென்று இஷ்டப்பட்டால், பெண்கள் அவர்களுடைய வீட்டுக்குப் போகத் தயாராக இருக்க வேண்டும். இந்தச் சொத்துக்களையெல்லாம் இரண்டு பங்காகப் பிரித்துப் பணமாக மூட்டை கட்டி அவர்களோடு கூட கொண்டு போகத்