பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

செளந்தர கோகிலம்



பூஞ்சோலையம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும் குது.ாகலமும் அடைந்தவளாய்ப் பேசத் தொடங்கி, 'கலியாணம் இன்றையத் தினம் பகலில்தான் நிச்சயிக்கப்பட்டது. பொழுது விடிந்தவுடன், புரோகிதரை வரவழைத்து நிச்சயதார்த்தத்துக்கு நாள் பார்க்க வேண்டும்” என்றாள்.

கற்பகவல்லியம்மாள், தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! இன்றைய தினம் காலை பத்து மணி முதல் நான் தங்களோடு கூடவே இருக்கிறேன். இந்தக் கலியாணத்தைப் பற்றிய பேச்சையே தாங்கள் யாரிடத்திலும் பேசவில்லையே! ஒரு வேளை தபாலில் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதோ என்னவோ! - அது எப்படியாவது இருக்கட்டும் மாப்பிள்ளை இருப்பது எந்த ஊர்?’ என்றாள். -

பூஞ்சோலையம்மாள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, 'மாப்பிள்ளையின் இருப்பிடம் இதோ இந்தப் பங்களாவுக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது” என்றாள்.

கற்பகவல்லியம்மாள்:- அப்படியானால், அவர்கள் எங்களுக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

பூஞ்சோலையம்மாள்:- தெரிந்தவர்கள்தான்.

கற்பகவல்லியம்மாள்:- பையன் படிக்கிறானா? உத்தியோகத்தில் இருப்பவனா?

பூஞ்சோலையம்மாள் :- உத்தியோகத்திலிருப்பவர்தான். கற்பகவல்லியம்மாள்:- பையனுடைய தகப்பனாருக்கு ஏதாவது உத்தியோகம் உண்டா?

பூஞ்சோலையம்மாள்:- அவருக்கு இப்போது தகப்பனார் இல்லை; தாயார் மாத்திரம்தான் இருக்கிறார்கள்.

கற்பகவல்லியம்மாள்:- (முற்றிலும் வியப்பும் திகைப்பும் அடைந்து) அது யாரென்பது தெரியவில்லையே! தாயும் பிள்ளை யுமாக இருக்கிறவர்கள் பிள்ளை உத்தியோகம் செய்கிறவர்; எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லையே! ஆனால், எங்களுடைய வீடு தங்களுடைய பங்களாவுக்கு மேற்கே இருக்கிறது. அவர்களுடைய வீடு ஒருவேளை கிழக்கே இருக்குமோ?