பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 125

கட்டத் தீர்மானம் ஆகியிருக்கிறது. அந்தப் பெண்ணும் உன்மேல் ஆசைப்படுகிறாளாம். சின்னப் பெண்ணுக்கு இன்னும் எந்த இடமும் நிச்சயமாகவில்லை. அது இப்போது நிச்சயமானாலும் ஆகாவிட்டாலும் உங்களுடைய கலியாணத்தை உடனே முடித்து விட வேண்டுமாம். நாளைய தினம் காலையில் புரோகிதரை வரவழைத்து, நிச்சயதார்த்தம், கலியாணம் ஆகிய இரண்டுக்கும் நாள் பார்க்கப் போகிறார்களாம். என்னுடைய கருத்து என்ன என்று கேட்டார்கள். இந்தச் சம்பந்தத்தை யாராவது வேண்டாம் என்று சொல்லுவார்களா? அதுவும் நம்மைப்போல தரித்திர தசையிலுள்ளவர்கள் ஒருநாளும் சொல்ல மாட்டார்கள். ஆகையால் நான் இதற்கு முழு மனசோடு சம்மதித்து விட்டேன். நீ என்ன சொல்லுகிறாய்? வேண்டாம் என்று சொல்லப் போகிறாயா? சீக்கிரமாகச் சொல், அவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள்.

அதைக் கேட்ட கண்ணபிரான் மிகுந்த கிலேசம் அடைந் தவனாய் தனது கருத்தை மறைக்கவும் மாட்டாமல், வெளியிடவுமாட்டாமல் சிறிது நேரம் தவித்திருந்த பின் தனது தாயை நோக்கி, "நான் எந்த விஷயத்திலாவது உங்களுடைய இஷ்டத்துக்கு மாறாக நடந்தது உண்டா? நீங்களாகப் பார்த்து யாரைக் கலியாணம் செய்து வைத்தாலும், நான் அதற்கு இணங்க வேண்டியவன்; அல்லது, கலியாணமே செய்யாமல் இப்படியே இருந்து விட வேண்டும் என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில் கூட நான் அப்படியே இருக்கக் கூடியவன். அப்படி இருக்க, இந்த இடம் நாம் தவம் செய்தாலும் நமக்குக் கிட்டாத மகா சிரேஷ்டமான இடம். இது தானாக வருகிறது. இதற்கு நீங்களும் சம்மதித்து விட்டீர்கள். இதைப் பற்றி என்னுடைய கருத்து என்னவென்று கேட்கவும் வேண்டுமா? என்னுடைய நன்மைக்கு இன்னதுதான் தக்கதென்பது உங்களுக்குத் தெரியாதா? நானென்ன உங்களை விடப் புத்திசாலியா? உங்களுடைய இஷ்டம் எதுவோ அதுவே எனக்கும் இஷ்டமானது. நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; என்னைக் கேட்க வேண் டியதே இல்லை; உங்களுடைய அதிகாரத்துக்கு மேல் அப்பீலே இல்லை' என்று குதுகலமாகக் கூறினான்.