பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

செளந்தர கோகிலம்



அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் அளவிறந்த மகிழ்ச்சி யடைந்தாள். தனது புத்திரன் எப்போதும் மிகுந்த வஜ்ஜையும், கிலேசமும் உடையவன், ஆதலால், அப்பேர்ப்பட்ட உயர்வான இடத்தில் தாங்கள் சம்பந்தம் செய்துகொள்வதைப் பற்றி கிலேசம் அடைந்தவனாய் ஏதேனும் ஆட்சேபணை சொல்லப் போகிறானோவென்று அதுகாறும் கற்பகவல்லியம்மாள் மிகுந்த கவலையும் ஆவலும் கொண்டிருந்தவள் ஆதலால், அவன் எவ்வித ஆட்சேபணையும் இல்லாமல் தனது சம்மதத்தைத் தெரிவித்ததைக் கண்ட கற்பகவல்லியம்மாள் கரை கடந்த மகிழ்ச்சியும், ஆநந்தமும், பூரிப்பும் அடைந்தவளாய் அந்த விஷயத்தைப் பூஞ்சோலையம்மாளிடத்தில் தெரிவித்து அந்த முடிவை மாறாமல் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் நிரம்பவும் தூண்டப்பட்டவளாய், "சரி, நீ படுத்துக் கொண்டு சுகமாகத் துங்கு. அவர்கள் காத்திருப்பார்கள். நான் போய் எல்லா விஷயங்களையும் முடிவு கட்டுகிறேன்” என்று கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு விரைவாக அப்பால் போய்விட்டாள்.

மறுபடியும் கட்டிலில் படுத்த கண்ணபிரான் பொழுது விடியும் வரையில் கண்களை மூடாமலேயே கிடந்து புரண்டு மனவெழுச்சியையும், இன்பப் பெருக்கையும், உடம்பின் பூரிப்பையும் தாங்க மாட்டாமல் கட்டிலடங்காத களிகொண்டு சுவர்க்க வாசலில் நின்று அதற்குள் காணப்படும் நித்தியாநந்த சுகத்தை உணர்பவன் போல இன்ப ஊற்றில் ஆழ்ந்து கிடந்தான். தனது மனம் எவள் மீது சென்று லயித்ததோ அவளே தானாக வந்து மனைவியாக வாய்க்கப் போவதை நினைக்க நினைக்க அது தெய்வ கடாrத்தினாலேதான் ஏற்படுகிறது என்ற எண்ணம் உதித்தது. முதல் நாள் மாலையில் தன்னை அவ்வளவாகக் கவனிக்காதவள் போல இருந்த கோகிலாம்பாளே தன் மீது காதல் கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு அளவு கடந்த வியப்பை உண்டாக்கியது. முதல் நாள் இரவில் அவளும் தேக அசெளக்கியத்தோடு இருந்தாள் என்பதைக் கேட்டபோதே அவளும் ஒருகால் தன்மீது மையல் கொண்டிருப்பாளோ என்று, அவன் முன்னரே நினைத்தது உண்மையாய்ப் போனதைக் காண, அவன் கட்டிலங்காத பூரிப்பும், குதூகலமும் அடைந்தவனாய்