பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

செளந்தர கோகிலம்



அப்படிப்பட்ட சுபகாலம் எப்போது வந்து நேருமோ என்ற ஏக்கமே அபாரமாக வந்து வதைத்துக் கொண்டிருந்தது. எப்படியும் தங்களது கலியாணம் நடப்பதற்குக் குறைந்தது ஒருமாத காலமாகிலும் பிடிக்கும் ஆதலால், அதுகாறும், அவ ளோடு பேசாமல் தான் தனக்குள்ளாகவே வருந்தி, வருந்தி நைந் துருகி இருந்தால், தனது உயிரே நிற்காதென்ற உறுதியும் மலைப்பும் தோன்றி அவனை அப்போதே வதைக்க ஆரம் பித்தன. அவ்வாறு கண்ணபிரான் மாறி மாறி இன்பமும் துன் பமும் அடைந்தவனாய், அந்த இரவைக் கடத்தினான். பொழுதும் விடிய, சூரியன் கண்ணபிரானுக்கு வந்து வாய்த்த எதிர்பாராப் பெரும்பாக்கியத்தை உணர்ந்து மகிழ்ச்சி கொண்டு நகைத்து எழுபவன்போலத் தனது யெளவன கிரகணங்களை வெகு இனிமையாகப் பரப்பிக் கீழ்த்திசையில் உயர்ந்தான். முதல் நாளிரவில் கற்பகவல்லியம்மாள் பூஞ்சோலையம்மாளிடத்திற்குப் போய், கண்ணபிரான் சம்மதியைத் தெரிவிக்க, அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த களிப்பும், ஆநந்தமும், பூரிப்பும் அடைந்தவளாய், பொழுது விடிந்தவுடனேயே புரோகிதரை வரவழைப்பது என்ற தீர்மானத்தைச் செய்து கொள்ள, அதன் பிறகு அவர்கள் எல்லோரும் கலியாணத்தின் மற்ற ஏற்பாடு களைப் பற்றி நெடுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்த பின், மஞ்சங்களில் சயனித்துக் கொண்டனர். செளந்தரவல்லி சொற்ப நேரம் வரையில் அவர்களது சம்பாஷணையைக் கேட்டிருந்து, அரை நாழிகையில் கடுந்துயிலில் ஆழ்ந்து குறட்டைவிடத் தொடங்கினாள். ஆனால் கோகிலாம்பாள், சகலமான காரியங்களையும் நடத்தி முடிவு செய்யும்படி, தனது தாயாகிய இயந்திரத்தின் விசையை நன்றாக முடுக்கி விட்டு, ஒன்றையும் அறியாத பேதைபோலவும், ஊமை போலவும் கடைசி வரையில் உட்கார்ந்திருந்து, மற்றவர் சயனித்தபின் தானும் ஒரு மூலையில் போய் நிரம்பவும் சாதாரணமான ஒரு சயனத்தில் படுத்துக் கொண்டாள். அப்படிப் படுத்தவள் மறுநாள் காலைவரை இமை மூடாமல் விரக வேதனையும், மனவெழுச்சியும் கொண்டு ஆழ்ந்து கிடந்தாள். முதல் நாளைய மாலையில் அவள் கண்ண பிரானைக் கண்டு, அவன் இன்னானென்பதையும், அவனது அற்புதமான வடிவழகையும், குணத்தழகையும் பரோபகார