பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

செளந்தர கோகிலம்



நீடுழி வாழப் போகிறார்கள். நாளைக்கு மறு நாள் காலை சரியாகப் பத்து நாழிகைக்கு நிச்சயதாம்பூலம் மாற்றலாம். இன்றைக்கு எட்டாம் நாள் காலை ஏழு நாழிகைக்கு மேல், ஒன்பது நாழிகைக்குள் நல்ல சுபமுகூர்த்தம், இதிலே இந்தக் கலியாணத்தை முடித்துவிடுவது சர்வ சிலாக்கியம், அது தவறினால் அடுத்தமாகத்தில்தான் முகூர்த்த தினம் இருக்கிறது. எட்டாம் நாளிலேயே நடத்தி விடலாம்' என்று கூறினார்.

அவர் முழுச்செவிடர் என்பதைக் கண்டுகொண்ட கோகிலாம்பாள் தனது தாயை நோக்கி, ஏதோ சைகை செய்ய, அதை உணர்ந்த பூஞ்சோலையம்மாள் புரோகிதரை நோக்கி, “இன்றைக்கு எட்டாவது நாளைய முகூர்த்தம் இருக்கிறதே, அதற்கு முன்பாகவே இன்னும் சமீபத்தில் கலியான நாள் இல்லையா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்” என்ற வினவ, உடனே புரோகிதர் தமது பஞ்சாங்கத்தை மேலும் ஒரு முறை புரட்டி நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்து எட்டாவது நாளில் வரும் முகூர்த்தத்தைத் தவிர சமீபத்தில் வேறொரு முகூர்த்தம் இல்லையென்று உறுதியாகக் கூறினார்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் தனக்குப் பக்கத்தில் இருந்த கற்பகவல்லியை நோக்கி நிச்சயதார்த்தத்தையும், கலி யாணத்தையும் புரோகிதர் குறித்த தினங்களில் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, கற்பகவல்லியம்மாளும் அதை ஆமோதித்தாள். பூஞ்சோலையம்மாள் புரோகிதரை நோக்கி, அவர் குறித்த தினங்களில் அந்தக் காரியங்களை நடத்துவதற்கு ஒரு லக்னப் பத்திரிகையும், தமது பந்துமித்திரர்களுக்கு எல்லாம் அனுப்புவதற்காகக் கலியாணக் கடிதத்தின் நகல் ஒன்றும் எழுதித் தரச்சொல்ல, அவர் அப்படியே செய்து எல்லாவற்றிற்கும் மஞ்சள் குறிகள் வைத்து ஆசீர்வதித்து அவைகளைப் பூஞ்சோலையம்மா ளிடத்தில் கொடுக்க, அந்த அம்மாள் அவைகளை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு கற்பகவல்லியம்மாளிடத்தில் கொடுத்துவிட்டுத் தனது புதல்விகள் இருந்த இடத்தைப் பார்க்க, உடனே கோகிலாம்பாள் அங்கே ஆயத்தமாக வைக்கப்பட்டி ருந்த ஒரு வெள்ளித்தட்டை ஒரு வேலைக்காரியிடம் கொடுத் தனுப்ப, அதை எடுத்துவந்து பூஞ்சோலையம்மாளிடம் கொடுத்