பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 133

தாள். அந்தத் தட்டில் வஸ்திரம், சால்வை, பணம், தாம்பூலம், புஷ்பம், பழம் முதலியவைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தட்டைப் பூஞ்சோலையம்மாள் வாங்கிப் புரோகிதருக்கு முன்னால் வைத்து வணக்கமாக கும்பிடுபோட்டு அவைகளை அங்கீகரிக்கும்படியும், நிச்சயதார்த்தத்தையும், கலியாணத்தையும் அவர் வந்து நடத்தி வைக்கும்படியும் வேண்டிக் கொள்ள, அவர் மிகுந்த மகிழ்ச்சியும், ஆநந்தமும் அடைந்தவராய், அந்த வஸ்துக்களை எடுத்து மூட்டை கட்டிக் கொண்டார். இரண்டு சுப காரியங்களுக்கும் என்னென்ன வைதீக சாமான்கள் வேண்டும் என்பதற்கு ஒரு ஜாப்தா தயார் செய்து அன்றைய தினம் பகலில் தாம் அனுப்புவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புரோகிதர் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்.

உடனே பெண்கள் இருவரும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். முகூர்த்தம் அவ்வளவு சமீப காலத்தில் நடக்கப் போவதைப் பற்றி அங்கிருந்தோர் அவைரும் கரை கடந்த மகிழ்ச்சியும், மனவெழுச்சியும், பூரிப்பும் அடைந்து, யார் என்ன பேசுவது என்பதை உணராமல் ஆநந்தமே நிறைவாக மெய்ம் மறந்து நின்றனர். அந்தச் சயமத்தில் ஒரு வேலைக்காரன் உள்ளே நுழைந்து பூஞ்சோலையம்மாளை வணங்கி, 'எஜமானே! வாசலில் ஒரு பெட்டி வண்டியில் யாரோ ஒர் அம்மாள் வந்திருக் கிறார்கள். பார்வைக்கு நிரம்பவும் பெரிய மனிதர் வீட்டு அம்மாள் போல இருக்கிறது. வண்டியில் காசாரிகள் நாலு பேர் இருக்கிறார்கள். வண்டிக் குதிரை எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன. அவர்கள் உள்ளே வந்து எஜமானைப் பார்க்க வேண்டுமாம்” என்றான்.

அதைக்கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் திடுக்கிட்டு ஒருவாறு திகைப்படைந்து அது யாராக இருக்கும் என்று சிந்திக்க லாயினர். உடனே பூஞ்சோலையம்மாள், 'அந்த அம்மாள் யார் என்ற விவரம் ஏதாவது சொன்னார்களா?" என்றாள்.

வேலைக்காரன், சொல்லவில்லை. அவர்களிடத்தில் அதைக் கேட்பதற்கும் எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், "சரி, யாராக இருந் தாலும் இருக்கட்டும். உடனே போய் அவர்களை இங்கே