பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

செளந்தர கோகிலம்



இட்டுக் கொண்டுவா” என்று கூற, வேலைக்காரன் உடனே வெளியில் போய்விட்டான்.

அவர்கள் நால்வரும் தத்தம் இடங்களில் உட்கார்ந்து கொண்டனர். இரண்டொரு நிமிஷ நேரத்திற்குப் பிறகு, 'இப்படி இந்த வழியாக வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டு அந்த வேலைக்காரன் வந்து நுழைந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு யெளவன ஸ்திரீநுழைந்தாள். அவளுக்கு இருபது வயதிற்கு மேல் இராது என்பது நன்றாக விளங்கியது. தந்தத்தில் கடைந்து எடுக்கப்பட்டதோவென ஐயுறத்தக்க சரீரமும், இயற்கை அழகும், வசீகரமும், நிறைந்த வதனமும், அடி முதல் முடி வரையில் வைரங்களும், கெம்புகளும் செறிந்த ஆபரணங்களும், ஜரிகைப் புள்ளிகள் நிரம்பிய பனாரீஸ் பட்டாடைகளும் ஜெகஜ்ஜோதி யாக ஒளிவீசிக் காண்போர் மனதையும் உயிரையும் கவர்ந்து கொள்ளை கொள்ள, தெய்வ லோகத்திலிருந்து அப்போதே நேராக வந்திறங்குபவள் போலக் காணப்பட்ட அந்த மங்கை நாணமும் கிலேசமும் நிறைந்தவளாய், பூஞ்சோலையம்மாளை நோக்கிப் புன்னகை செய்து தலை குனிந்து வணங்கியபடி, மடவன்னம்போலத் தளர்நடை நடந்து உள்ளே புகுந்தாள்.

அவள் யாரோ ஒரு பிரபுவின் வீட்டு ஸ்திரீயென்று உடனே யூகித்துக் கொண்ட பூஞ்சோலையம்மாளும் மற்றவரும் அவளது அழகையும், அலங்காரத்தையும் கண்டு ஒருவாறு பிரமித்துப் போயினர். உடனே பூஞ்சோலையம்மாள் அவளை நோக்கி, 'வாருங்கள் அம்மா, இந்த ஸோபாவில் உட்கார்ந்து கொள் ளுங்கள்” என்று அந்தரங்கமான அன்போடு உபசரித்து வர வேற்று மரியாதை செய்ய, அந்த யெளவன ஸ்திரீ வருகிறேன்" என்ற கூறிய வண்ணம் பக்கத்தில் இருந்த ஒரு ஸோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டவளாய்ப் பூஞ்சோலையம்மாளை நோக்கி, "இந்தப் பெண்களுக்கும் தங்களுக்கும் உள்ள முக ஒற்று மையிலிருந்து, தாங்கள்தான் இந்தப் பங்களாவின் எஜமானி யம்மா என்பது தெரிகிறது. தங்களிடத்திலும், தங்களுடைய பெண்களிடத்திலும், ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போவதற்காக நான் வந்தேன்' என்று நயமாகப் பீடிகை போட்டுப் பேசத் தொடங்கினாள்.