பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 135

அவளது சொல்லைக் கேட்ட பூஞ்சோலையம்மாள், "நாங்கள் இன்னார் என்பது வெகு சுலபத்தில் யூகித்த்றிந்து கொண்டு விட்டீர்கள். ஆனால் தாங்கள் யாராக இருக்கலா மென்று நான் யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆகையால், அந்த விவரத்தைச் சொல்லும்படி யான சிரமத்தை நான் தங்களுக்குக் கொடுத்தே தீர வேண்டி யிருக்கிறது” என்றாள்.

அதைக்கேட்ட அந்த யெளவன ஸ்திரீ, 'அந்த விவரத் தையெல்லாம் தாங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது நிரம்பவும் அவசியமான விஷயம். தஞ்சாவூர் ஜில்லாவில் கோவிந்தபுரமென்று ஒரு சமஸ்தானம் இருக்கிறது. எங்களுடைய தகப்பனார்தான் அந்தச் சமஸ்தானத்து ஜெமீந்தார்’ என்றாள்.

உடனே பூஞ்சோலையம்மாள் திடுக்கிட்டு வியப்பாகப் பேசத் தொடங்கி, "ஒகோ அப்படியா அன்றையத் தினம் சாயங் காலம் சமுத்திரக்கரையில் மோட்டாரில் வந்தவர்களுக்கும் தங்களுக்கும் என்ன பாந்தவ்வியமோ?” என்ற நயமாகக் கேட்க, அந்த யெளவன ஸ்திரி "அவர் என்னுடைய தமயனார். எங்களுக்கு மைலாப்பூரில் ஒரு பங்களா இருக்கிறது; அன்றைய தினம் அவர் ஏறிவந்த மோட்டார் வண்டியில் திடீரென்று ஒரு விசை கெட்டுப்போய் விட்டதாம்; அதனால் அந்த மோட்டார் வண்டியை அவர் அப்புறம் இப்புறம் திருப்பவும், நிற்க வைக்கவும் முடியாமல் போய்விட்டதாம் நல்ல வேளையாக தங்களுடைய வண்டிக்காரன், ஸாரட்டு வண்டியைக் கொஞ்சம் அப்பால் திருப்பி விட்டானாம்; இல்லாவிட்டால், அன்றைய தினம் பெருத்த அபாயமும், உயிர்ச்சேதமும் நேர்ந்திருக்குமாம்; என்னவோ தெய்வந்தான் வந்து குறுக்கிட்டு எல்லோரையும் காப்பாற்றியது. அந்த விவரங்களையெல்லாம் கேட்டவுடன் என்னுடைய உடம்பு பதறிப்போய்விட்டது. என்னுடைய தமய னாரும் அது முதல் இதே வியாகுலமாகப் படுத்த படுக்கையாய் இருக்கிறார். தங்களுடைய குழந்தைகளுக்கும் பலமாக அடிபட்டிருக்குமோ என்ற கவலையினால் நாங்கள் நேற்று முழுவதும் நிரம்பவும் சங்கடப்பட்டுப் போனோம். தங்க ளுடைய ஜாகை எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்தறிந்து