பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

செளந்தர கோகிலம்



குமானால் பொருளைப் பற்றிக்கூட எங்களுக்கு அவ்வளவாகக் கவலை இல்லை. அவருடைய மனசுக்கு உகந்த பெண் இந்த உலகத்திலேயே இல்லையென்று கண்டு நாங்கள் நம்பிக்கையை இழந்து, இனி என்ன செய்கிறதென்று கவலை கொண்டிருந் தோம். ஆனால், அன்றைய தினம் கடற்கரையில் அபாயம் நேர்ந்த பிறகு, அப்படிப்பட்ட உத்தம குண ஸ்திரீத்தனம் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது என்பதை அவர் கண்டு அந்த சந்தோஷ செய்தியை எங்களிடத்திலெல்லாம் தெரிவித்தார். அந்த ரத்னம் இப்போது தங்களுடைய வசத்தில் இருக்கிறது; தங்களி டம் மன்னிப்புக் கேட்பதோடு, அந்த ரத்னத்தையும் எங்களுக்குச் சன்மானமாகக் கொடுக்கும்படி கேட்க வேண்டுமென்பது, நான் இங்கே வந்ததன் இரண்டாவது கருத்தான அதி முக்கியமான விஷயம். அதிர்ஷ்டவசமாக நாங்களும் தாங்களும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். அந்தச் சந்தேகத்தை யும் நான் நன்றாக விசாரித்து அறிந்துகொண்டு வந்ததனாலே தான் ஒரு நாள் தாமசமாக வர நேர்ந்தது. தங்களிடத்தில் ஏதாவது ஒன்று வேண்டுமென்று கேட்போருக்கு, தாங்கள் இல்லையென்ற சொல்லை உபயோகித்து அறியாத சிறந்த வள்ளல் என்பதை நான் அறிவேன். ஆகையால், என் விஷயத்தி லும் இல்லையென்ற சொல் இராதென்று நினைத்தே நான் இதைக் கேட்கத் துணிந்தேன் - என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாளும் மற்றவர்களும் திடுக்கிட்டு வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

உடனே பூஞ்சோலையம்மாள் புஷ்பாவதியை நோக்கி, 'அம்மா நான் சொன்னது சரியாகப் போய்விட்டது; இந்த அபாயம் நேரிட்டதிலிருந்து எப்படிப்பட்ட புதிய சிநேகமும், எதிர்பாராத நன்மைகளும் ஏற்படுகின்றன பார்த்தீர்களா? தங்களைப் போன்ற ஜெமீந்தாருடைய குடும்பத்திலெல்லாம் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு சம்பந்தம் நேரிடு வது பெருத்த அதிர்ஷ்ட பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்; என்னுடைய குழந்தை தங்களுடைய தமயனாருக்கு வாழ்க்கைப் பட வேண்டுமென்ற ஈசுவர சங்கற்பம் இருந்தால், அப்படியே நடக்கட்டும். எதுவொன்றும் நிறைவேறும் காலம் வந்துவிட்டால்