பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

செளந்தர கோகிலம்



பரணங்களை அணிந்தவனாய், அந்த யெளவனப் புருஷன் அப்போதே மணப்பிள்ளையின் கோலத்தையடைந்து விட்டான். அவன் நல்ல சிவப்பான அழகு வழிந்த உடம்பும், வசீகரமான முகமும் பெற்றவனாதலால், இயற்கை வனப்பும், செயற்கை அலங்காரமும் ஒன்று கூடி, அவனைக் காண்போரது மனம் ஆநந்தபரவசம் அடைந்து சந்தோஷப் பெருக்கினால் மலரும்படி செய்ததன்றி, அவனிடத்தில் ஒரு வார்த்தையாகிலும் பேச வேண்டுமென்ற ஆவலும் பிரேமையும், அவனைக் காண்போது மனதில் எல்லாம் எழுந்து சஞ்சலப்படுத்தச் செய்தன. அவனை அதற்கு முன் கண்டவர் எவரும் அவனது அடையாளத்தைக் காணமாட்டாதபடி அவனது தோற்றமும், அலங்காரமும் அவ் வளவு புதுமையாக இருந்தன. அவன் தன்னைத்தானே நிலைக் கண்ணாடியில் பார்த்து, தான் கந்தருவலோகத்து ராஜகுமாரன் போல அதிக சுந்தர ரூபனாக இருந்ததையும், அத்தனை ஆடை ஆபரணங்களும் சேர்ந்து தன்னை ஒர் இளவரசன்போல மாற்றி விட்டதையும் கண்டு, தனது ஒப்பற்ற அழகை நோக்கித் தானே பிரமித்து, வைத்த கண் வைத்தபடியே நெடுநேரம் வரையில் நின்று பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவனாக இருந்து, அன்னிய மனிதர் தன்னைக் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து நிலைக்கண்ணாடியை விட்டு அப்பால் நடந்தான். அங்கே வந்த ஜனங்கள் எல்லாரும், அவனைப் பார்த்து அதி வியப்பும், திக்பிரமையும் அடைந்து, "இவர்தான் மாப்பிள்ளை! இவர்தான் மாப்பிள்ளை' என்று தமக்குள் தணிவாகக் கொசகொசவென்று காதோடு பேசிக்கொண்டு தங்களது முகத்தை மலர்த்தி அவனை நோக்கிப் புன்னகை காட்டியபோ தெல்லாம், அவன் மிகுந்த நாணமும், லஜ்ஜையும் அடைந்தவ னாய்க் கீழேயாவது பார்ப்பான், அல்லது தனது முகத்தை அப்புறமாவது திருப்பிக் கொள்வான். தன் பொருட்டு அத்தனை அலங்காரங்களும், ஏற்பாடுகளும் செய்யப்படுவதையும், ஏராளமான ஜனங்கள் வந்து கூடுவதையும், பூஞ்சோலையம்மாள் பெட்டியிலிருந்து ஆயிரக்கணக்காகப் பணத்தை எடுத்துச் செலவிடுவதையும் காணக் காண கண்ணபிரானது மனமும் தேகமும் களிகொண்டு பூரித்தன. நிரம்பவும் ஏழையாக இருந்த தனக்கு அப்படிப்பட்ட பெருத்த பாக்கியம் தானாக வருமா