பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

செளந்தர கோகிலம்



அவ்விடத்திலுள்ள விநோதங்களைக் கவனித்தாலாகிலும், தனது மனோவேதனை சிறிது நேரமாகிலும் மறைந்திருக்காதா என்று நினைத்தவனாய், அவ்விடத்தை விட்டுப் பூஞ்சோலையை நோக்கி மெல்லச் சென்றான். அப்படி அவன் செல்லுகையில், வழியிலிருந்த மாட கூடங்களிலிருந்த ஜன்னல்கள், வாசல்கள் முதலிய சகலமான திறப்புகளின் வழியாகவும், அவன் தனது பார்வையை உட்புறத்தில் செலுத்தி, தெய்வச் செயலாக, கோகிலாம்பாள் எந்த இடத்திலாகிலும் இருந்து தனது திருஷ்டியில் பட்டு விடக் கூடாதா என்று எதிர்பார்த்தவனாய் தயங்கித் தயங்கி மெல்ல மெல்ல நடந்தான். முதல்நாள் தான் பூஞ்சோலையிலிருந்து திரும்பியபோது மேன்மாடத்திலிருந்து சிரித்ததுபோல, அன்றைய தினமும் அதே பெண்ணாகிலும், அல்லது கோகிலாம்பாளாகிலும், மேன்மாடத்திலிருந்து தனக்கு ஒருகால் தரிசனம் கொடுக்கலாம் என்ற மூட நம்பிக்கையைக் கொண்டவனாய், அவன் மேலே அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். கோகிலாம்பாள் வராவிட்டாலும், செளந்தரவல்வி யையாகிலும் தான் பார்க்க நேர்ந்தால், அவளது வடிவத்தைக் காண்பதிலிருந்து கோகிலாம்பாளின் முகச்சாயல் தனது அகக் கண்ணிற்கு நன்றாக நினைப்பு உண்டாகும் என்ற யோசனையும் உண்டாயிற்று. அவ்வாறு, அவன் கோகிலாம்பாளைக் காண மாட்டாமையால், பைத்தியம் கொண்டவன்போல மாறி, சகிக்க இயலாத கலவரம் அடைந்தவனாய்ப் பூஞ்சோலைக்குள் நுழைந் தான். அவன் அவ்வளவு பாடு பட்டும், இரண்டு மடந்தையருள் ஒருத்தியேனும், அவனது திருஷ்டிக்குத் தோன்றவில்லை. ஆகவே, அவன் சோர்ந்து தளர்ந்து நைந்து உருகி நடைப்பிணம் போல அந்த அதிமனோக்கியமான உத்தியான வனத்திற்குள் நுழைந்து, அதற்குள் அபாரமாக நிரம்பிக் கிடந்த இயற்கை அற்புதங்களையும், அதிசய சிருஷ்டிகளையும், சிரேஷ்டமான ஏற்பாடுகளையும் கண்டு அவற்றில் தனது மனத்தைத் திருப்ப முயன்றவனாய் ஒரிடம் விடாமல் போய்ப் பார்த்துக் கொண்டே அந்தப் பூங்காவின் முடிவு வரையில் போய்விட்டுத் திரும்பி விட்டான். அவன் ஒரு பக்கமாகப் போய் இன்னொரு பக்க மாகத் திரும்பி வந்தான். அப்படி வந்த வழி அவனை ஒரு சிறிய தாமரைத் தடாகத்திற்கு அருகில் கொண்டுவந்து விட்டது. இந்தத்