பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 16i

தோட்டத்திற்கு எல்லாம் அந்த இடமே முகம் போலவும், உயிர்நிலைப் போலவும், ரிஷி ஆசிரமம் போலவும் காணப் பட்டது. அவ்விடத்தில் எங்கும் மணல் மேடுகளும், ஆல மரங் களும், தென்னை, கமுகு, வாழை, பலா முதலிய தருக்களும், மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய பூச்செடிகளும் அடர்ந்து எங்கும் ஒரே பச்சையாக இருக்க, பார்க்கும் இடங்களில் எல்லாம் கொடிகளும், செடிகளும், கிளைகளும், அழகழகாய்ப் பின்னிக்கொண்டு, இயற்கையிலேயே தோன்றி பந்தல்போல இருந்தன. எங்கும் ஜிலு ஜிலென்ற காற்றும் நிழலின் குளிர்ச்சி யுமே நிறைந்து, அங்கு வருவோரது மனத்தையும், கண்களையும், தேகத்தையும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தின. பார்க்கும் இடங்களிலெல்லாம் சலவைக்கல் மேடைகளும், சாய்மான நாற்காலிகளும், ஊஞ்சல்களும் நிறைந்து அவற்றின் மேல் கொடி களும், மரக்கிளைகளிலிருந்து பூத்துக் காய்த்துப் பழுத்து வளைந்து நிறைந்து தொங்கிய கிளைகளும் சூழ்ந்து அந்த ஆசனங்களையெல்லாம் அநேகமாக மூடிக் கொண்டிருந்தன. அந்தத் தடாகத்தின் தண்ணிர் பளிங்குபோலத் தெளிந்திருக்க, தாமரை இலைகள் சலடை சலடையாகப் பரவி, அந்தத் தண்ணர் முழுவதையும் மூடிக் கொண்டிருந்ததும், இடையிடையே தாமரை மலர்களும், அரும்புகளும், நீலோற்பலங்களும் வரு வோரை நோக்கி நகைப்பன போல இருந்ததும் கண்கொள்ளா இனிய காட்சியாக அமைந்து, மனங்கொள்ளாத பேராநந்தத்தை உண்டாக்கின.

வானுலகத்து மங்கையர் கூடி ஜலக்ரீடை செய்யும் பளிங்கு வாவியோ, அல்லது, வைரக்கற்களை உருக்கி ஜூலமாக நிரப்பப்பட்டிருந்த குபேர பொக்கிஷமோ, பஞ்சவடி தீரமோ, சரவணப் பொய்கையோ என யாவரும் மயங்கத் தகுந்தபடி இருந்த மகா சிலாக்கியமான அந்தத் தடாகத்தண்டையில் வந்த கண்ணபிரான் அவ்விடத்தில் தானாகவே அவனது மனதில் ஊறிய பிரம்மாநந்தத்தினால் மேற்கொள்ளப்பட்டவனாய் அப்போதே இரண்டொரு நிமிஷ நேரம் வரையில், தனது சஞ்சலங்களையும் கோகிலாம்பாளது நினைவையும் மறந்தவ னாக நடந்தான். அந்தப் பூங்காவின் மற்ற எல்லா இடங்களை யும் விட அந்த ஒரிடமே சிறிதளவு சுகமாகத் தோன்றி அவனது

செ.கோ.1-12