பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

செளந்தர கோகிலம்



புஷ்பச் செடி கொடி தருக்களின் இடையில் சித்திரப் பாவை போல சொகுசாக அமர்ந்திருந்த அந்தப் பூங்கோதை, தன் வலது காலை மடக்கி ஊஞ்சற் பலகையின் மேல் வைத்து, இடது காலை அதன்மேல் போட்டுக் கீழே தொங்கவிட்டிருந்தாள். அப்படித் தொங்கவிடப்பட்டிருந்த இடது காலில் பாதத்திற்கும், தரைக்கும் மத்தியில் ஒரு சாண் உயரம் இடைவெளி இருந்தது. அவ்வாறு வீற்றிருந்த இள நங்கை, தனது வலக்கரத்தால் ஊஞ்சற் பலகையின் ஒருபுறத்துச் சங்கிலியைப் பிடித்துக் கொண் டும், தனக்கு எதிரிலிருந்து பன்னீர்க் கிளையை இடக்கரத்தால் பிடித்து இழுத்து ஊஞ்சலை ஆட்டிய வண்ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து யோக நிஷ்டையில் இருப்பவள் போலத் தன்னையும் உலகத்தையும் மறந்து தனது முழு கவனத்தையும் ஏதோ ஒரு விஷயத்தில் செலுத்தி, தனக்குப் பின்னால், ஏழெட்டு கஜதுரத்தில் வந்துநின்ற வடிவழகனான கண்ண பிரானைப் பார்க்காமல் ஒரே நிலையில் உட்கார்ந்திருந்தாள்.

அவ்வாறு சொற்ப நேரம் கழிந்தது. எவ்வளவு நேரம், எத்தனை தரம் பார்த்தாலும், அவளது ஒவ்வோர் அங்கமும் அதி கரித்த அழகைக் காட்டி இன்பத்தைச் சொரிந்து கொண்டிருந்தது. இருந்தாலும், அவள் ஒருகால் திரும்பிப் பார்த்தால், தனது நிலைமை நிரம்பவும் கேவலமாகப் போய்விடும் என்ற நினை வும், அச்சமும் அவனது மனதில் தோன்றின. அவள் காணாவிட் டாலும், நிச்சயதார்த்தத்திற்காக வந்து கூடியிருக்கும் ஜனங்களுள் எவரேனும் பூஞ்சோலையைப் பார்க்க ஆசை கொண்டு, அந்தச் சமயத்தில் அங்கே வந்து, தாங்கள் இருவரும் தனியாக இருப் பதைக் கண்டால், அதனால் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் இழிவும், பழிப்பும் ஏற்படும் என்ற அச்சம் அவனது மனதில் தோன்றி வதைக்கவே, தான் அவ்விடத்தை விட்டு உடனே அப்பால் போவது அவசியமான காரியம் என உணர்ந்தவனாய்ப் பின்புறம் திரும்ப நினைத்தான். ஆனால், வசீகரச் சக்கரம் போலே, அவனது உள்ளத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருந்த அந்த இனிய வடிவத்தைக் கடைசியாக இன்னொரு முறை பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்ற ஒரு சபலம் விலக்க முடியாத வகையில் எழுந்து அவனை வதைத்தது. ஆகையால், அவன் கடைசியாக அவளது பக்கம் திரும்பி, முடி முதல்