பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 169

நாகப்பாம்பு அவளது திருஷ்டியில் பட்டது. அதைக்கண்ட கோகிலாம்பாள் அபாரமான திகிலடைந்து, 'அய்யோ! அப்பா!' என்று உளறியடித்துக் கொண்டு, தனக்கருகில் நின்று கொண்டிருந்த மன்மதரூபனான கண்ணபிரான் மீது பாய்ந்து மிகுந்த பயத்தோடும், ஆவலோடும் கட்டிக் கொண்டாள். அந்த ஒரு நொடிக்குள் அவளது பிராணன் துடித்துப் போய்விட்டது; மூளை குழம்ப, அறிவு பிறழ்ந்தது. கை கால்களெல்லாம் வெட வெடவென்று ஆடுகின்றன. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வியர்வை வெள்ளம் குபிரென்று பொங்கி வழிகிறது. தென்றல் காற்றில் அசையும் மாந்தளிர்போல அவளது மிருதுவான அழகிய சரீரம் துடி துடிக்கிறது; அளவு கடந்த அச்சத்தினால், அந்த அழகிய நங்கை அவனை இறுகப் பிடித்துக் கட்டிக் கொள்ளவே, அவன், 'கோகிலா பயப்படாதே அந்தப் பாம்பு இரை விழுங்கி இருக்கிறது. இங்கே வராது. நீ முதலில் கொஞ்ச ஜலம் குடித் தால், உன்னுடைய பயமெல்லாம் தெளிந்து போகும். வா, குளத்திற்குள் இறங்குவோம்” என்று கூறி அவளை மெதுவாக நடத்தி அழைத்துக் கொண்டு போய் அந்தத் தாமரைத் தடாகத் திற்குள் இறங்கி, தனது கையால் தண்ணிர் எடுத்து அவளது வாயில் விடுத்துப் பருகச் செய்த பின், அவளை அழைத்து வந்து, மணல் நிறைந்திருந்த கரையின் மேல் உட்கார வைத்துவிட்டு, அங்கே கிடந்த நாலைந்து கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய், அந்த நாகப்பாம்பை அடித்துக் கொன்று விட்டுத் திரும்பி அவளிடம் வந்து சேர, அந்த மெல்லியலாள் சகிக்க இயலாத மன அதிர்ச்சியினாலும், அச்சத்தினாலும் அப்போது மயங்கி ஒரு மரத்தடியில் சாய்ந்திருக்க அவளது பரிதாபகரம்ான நிலைமையைக் கண்டு மிகவும் இரக்கங் கொண்ட கண்ணபிரான், தனது உருமாலையை நனைத்துக் கொணர்ந்து, அவளது முகத்தை அதனால் துடைத்து விட்டு, அவளைக் கட்டிப்பிடித்து தனது மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, 'கோகிலா! கோகிலா! கண்ணே! உடம்பு என்ன செய்கிறது? அந்தப் பாம்மை அடித்துக் கொன்று விட்டேன்; பயப்படாதே; விழித்துக் கொள்' என்று நிரம்பவும் உருக்கமாகவும், வாஞ்சையோடும் கூறித் தனது கையால் அவளது அழகிய கண்களையும், கன்னங்களையும் பிரியமாகத்