பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 173

ஆகாயவாணி பூமாதேவியும் அறியக் கணவன் மனைவி என்ற பாந்தவ்வியத்தை அவர்கள் உண்டாக்கிக் கொண்டு விட்டனர். அதன் பிறகு ஜனங்களுக்கு எதிரில் புரோகிதர் மந்திரம் சொல்லித் தாலி கட்டுவதான வெளிப்படையான சாங்கிய மொன்றைத் தவிர அவர்களது திருமணம் அப்போதே முடிந்து போனது போலாயிற்று. அவ்வாறு தாங்கள் முகத்தோடு முகம் வைத்தபடியே இருக்கிறோம் என்பதைக் கால் நாழிகைக்குப் பிறகு உணர்ந்த பேதை மடவன்னமான கோகிலாம்பாள், ஆகா! நான் கல்யாணமாகாத கன்னிகையாயிற்றே உண்மை யில் இவரையே நான் புருஷராக அடைய இருந்தாலும் இன்னமும் கலியாணச் சடங்கு முடியவில்லையே! இந்த நிலை மையில் நான் இவரோடு தனிமையில் இருப்பதை எவராகிலும் கண்டால், நான் திமிர் கொண்ட பட்டியென்று எல்லோரிடத் திலும் சொல்லிப் புரளி செய்வார்கள்; அதுவும் தவிர, நான் இவரிடத்தில் எவ்வளவு அதிகமான பிரேமையையும், ஆசை யையும் காட்டித் தாராளமாக இருக்கப் புகுந்தால், இவரே என்னைப் பற்றி ஏதேனும் இழிவாக நினைத்துக் கொள்வாரே' என்று தனக்குள் நினைத்து, உடனே தனது கைகளையெடுத்துத் தனது முகத்தை அப்பால் விலக்கிக் கொண்டு, அவனது முகத்தைப் பார்க்க வெட்கமும் நாணமும் அடைந்தவளாய்த் தனது சுந்தரவதனத்தை அவனது மடியின் மீது புதைத்துக் கொண்டாள் அந்த மனமோகன ஏந்தெழிலாள். அவ்வாறிருந்த புது மோகக் காட்சி, கடவுளும் கண்டு களிகொண்டு, ஆநந்தத் தாண்டவமாடத்தக்க அதியற்புத ரமணியக் காட்சியாக இருந்ததென்றால், வாய் திறந்து பேசவும் மாட்டாமல் அப்படியே சொக்கிப் போயிருந்த கண்ணபிரான், அந்தக் கண் கொள்ளா மனோகரக் காட்சியில் தனது மனம் முழுவதையும் லயிக்கவிட்டு அப்படியே சித்திரப் பதுமைபோலச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தது ஒரு விந்தையாகுமா? அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் செல்ல, அந்த யெளவனப் புருஷன் அவளது முகத்தை பிடித்து மெதுவாகத் திருப்பி, 'கண்ணே ஏன் இப்படி வெட்கப் படுகிறாய்? என்னை நிமிர்ந்து பார்' என்று கொஞ் சலாகப் பேசிய வண்ணம் மறுபடியும் அவளது கமலக் கண்களி லும், கனிந்த அதரங்களிலும் மாறி மாறி முத்தமிட அவ்வாறு