பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

செளந்தர கோகிலம்



விஷயங்களுக்குத் தான் இணங்கியிருந்தது, கண்டிப்பாகப் பார்க்கும் பட்சத்தில், தவறுதான் என்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால், தான் பாம்பினால், கடிக்கப்படும் சமயத்தில் இருந்த தைக் கருதி கண்ணபிரான் தன்னைத் துக்கியெடுக்க நேர்ந்த தையும் மற்ற விவரங்களையும் செளந்தரவல்லியம்மாள் அறிந்தி ருந்தால் அவள் தன் மீது அவ்வளவு குற்றம் சுமத்தியிருக்க மாட் டாள் என்பதும் தெரிந்தது. இருந்தாலும் தனது தங்கைக்கு எதிரில் அதுகாறும் அற்பமும் குற்றமற்ற நடத்தை உள்ளவளாக நடந்து நற்பெயர் எடுத்து, அவளுக்கே பல சமயங்களில் நற் புத்தியும் நன்னடத்தையும் போதித்து வந்தவளான தான் தனது தங்கைக்கு எதிரில் அப்படிப்பட்ட விகாரமான நிலைமையில் இருந்தது, கோகிலாம்பாளுக்குச் சகிக்க முடியாத வெட்கமாகவும், துன்பமாகவும் இருந்தது. தனது நியாயத்தை எடுத்துத் தனது தங்கைக்குச் சொல்வதற்கும் அவளது மனம் இடம் கொடுக்க வில்லை. அப்படிப்பட்ட பரம சங்கடமான நிலைமையில் தான் தனது தங்கைக்கு எதிரில் இருப்பதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அப்படியே பிராணனை விட்டு விடலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. தாங்கவொண்ணாத அவமானத்தி னாலும், துக்கத்தினாலும் அவளது நெஞ்சம் பதறக் கண்களிலி ருந்து கண்ணிர் பொங்கி மளமளவென்று வழிந்தது. மூளை குழம்பியது. அறிவு பிறழ்ந்தது. தான் பூமியில் நின்றாளா, ஆகாயத்தில் பறந்தாளாவென்று சந்தேகிக்கும்படியாக அவளது மதி மயங்கியது. அவளது கண்ணிற்கு எதிரிலிருந்த மனிதர்கள், மரங்கள், தடாகம் முதலிய யாவும் மேலே உயர்ந்து உயர்ந்து கீழே தணிந்தன. அப்படிப்பட்ட மகா துன்பகரமான நிலைமை யில் கோகிலாம்பாள் நின்று, காம்பு ஒடிபட்ட தாமரைப் புஷ்பம்போல வாடித் துவண்டு தனது சிரத்தைக் கவிழ்த்தபடி சித்திரப் பதுமைபோல் அசைவற்று மெளனமாக நின்றாள். செளந்தரவல்லியம்மாள் உபயோகித்த கன்னகடுரமான சொற் களெல்லாம் உருக்கி வார்த்த நாராசம்போலக் கண்ணபிரானது செவிகளில் புகுந்து தீய்த்தன. அடக்க வொண்ணாத ஆத்திரமும், கொதிப்பும் எழுந்து அவனைக் கலக்கி உலுப்பிக் கொண்டி ருந்தன. அவ்வாறு பேசியவள் கோகிலாம்பாளது தங்கையாக மாத்திரம் இல்லாதிருந்தால், அந்நேரம் அவன் அவளை நிரம்