பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

செளந்தர கோகிலம்



பிரானது மனம் மிகுந்த இரக்கமும், பரிதாபமும் விசனமும் கொண்டு இளகி உருகித் தவித்தது. அவளுக்குத் தன்னால் ஏற் பட்ட அந்தப் பெரிய விபத்தைத் தானே தீர்த்து வைக்க வேண் டும் என்ற எண்ணம் கொண்டவனாய், கண்ணபிரான் நிரம் பவும் தைரியமாகவும், விரைவாகவும் செளந்தரவல்லிக்குப் பின் னால் இரண்டோரடி வைத்து எடுத்து வைத்து அன்பாகவும், நய மாகவும், மரியாதையாகவும் பேசத் தொடங்கி, "செளந்தர வல்லியம்மா கொஞ்சம் நில்லம்மா போகலாம். அடேயப்பா! உனக்கு இவ்வளவு கோபம் உண்டாகும் என்று நான் . கொஞ்சமும் நினைக்கவே இல்லை; எந்த வீட்டிலும் கடைக் குட்டிக் குழந்தைதான் எப்போதும் செல்லக்குழந்தை என் பார்கள். அப்படிப்பட்ட செல்லக் குழந்தை திட்டினாலும் அடித்தாலும் பூவினால் அர்ச்சனை செய்வது போலவும், நல்ல மாதுரியமான தின்பண்டங்களைத் தின்பது போலவும் இருக்கும் என்று ஜனங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்; அதுபோல நீ இந்நேரம் உன்னுடைய அக்காளிடத்தில் கோபமான வார்த்தை களை உபயோகித்ததாகவே கோகிலாம்பாள் கொஞ்சமும் எண்ணவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. நீ சொன்னதற்கு எல்லாம் அவள் பேசாமல் மெளனமாக நிற்பதிலிருந்து, அவள் உன்னிடத்தில் எவ்வளவு மதிப்பும், வாஞ்சையும், உன் மனசை வருத்தக் கூடாதென்ற பட்சமும் வைத்திருக்கிறாளென்பது பரிஷ் காரமாகத் தெரிகிறது. ஆகையால், நீ இப்போது பங்களாவுக்குப் போய் இந்த நியாயத்தை அங்கேயுள்ள மனிதரிடத்தில் சொல்லு வதைவிட நீயே இன்னமும் என்னென்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லி உன் மனசில் பட்ட சங்கதிகளைச் சொல்வத் தடையென்ன? உன்னைக் கண்டிக்க உன்னுடைய அக்காளுக்கு எப்படி உரிமையும், அதிகாரமும் உண்டோ, அதுபோல, உன் னுடைய அக்காளைக் கண்டிக்க உனக்கும் உரிமையும், அதிகார மும் உண்டு. இந்தப் பங்களாவில் கோகிலாம்பாளைக் கண் டிக்கக் கூடியவர்கள் உன்னையும் உன்னுடைய அம்மாவையும் தவிர வேறே யாருமில்லை அல்லவா? உன்னுடைய அம்மாள் கலியான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு விருந்தினருக்கு நடுவில் இருப்பார்கள். அங்கே போய் இப்போது நீ இந்த விஷயத்தை வெளியிட்டால், இதனால் ஏற்படும் அவமானம்