பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 385

பயப்படாதே, செத்துப் போய்க் கிடக்கும் பாம்பின் வெற்றுடம்பைக் கண்டு நீ இவ்வளவு தூரம் கதிகலங்கித் துள்ளிக் குதித்தாய், அதுவுமன்றி சுத்த அன்னியனான என்மேல் வந்து விழுந்தாய். நான் உன்னைப் பிடித்துக் கொள்ளாதிருந்தால் நீ கீழே விழுந்திருப்பாய். இந்தச் சம்பவம் நடக்கும் போது நாம் இருவர் மாத்திரம் தனியாக இருக்க, வேறே யாராவது நம்மைப் பார்த்திருந்தால், அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் தெரியுமா? நீயும் நானும் துன்மார்க்க நினைவோடு கட்டி ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறதாக நினைப்பார்கள் அல்லவா?’ என்று கூறி நிரம்பவும் இனிமையான மலர்ந்த வசீகர முகத்தோடு அவளை நோக்கினான்.

அந்த நாகப்பாம்பு இறந்து போய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்த செளந்தரவல்லி தனது இயற்கையான துணிவை அடைந்தவளாய்க் கண்ண்பிரானைப் பார்க்காமல் வேறொரு பக்கமாகத் திரும்பி நின்றபடி பேசத் தொடங்கி, 'மனிதர் வேண்டுமென்று தாமாகவே ஒரு காரியத்தைச் செய்வதற்கும், ஏதோ ஒர் அபாயத்தில் தற்செயலாகச் செய்வதற்கும் வித்தியாசம் தெரியாமலா போய்விடும்? நமக்கு மாத்திரந்தானா அறிவிருக் கிறது? பார்க்கிறவர்களுக்கு அறிவில்லாமலா போய்விடும்?” என்று குத்தலாகப் பேசினாள்.

அந்த வார்த்தையைக் கேட்ட கண்ணபிரானது முகம் சடக் கென்று மாறுபட்டது. தனது தந்திர வார்த்தையெல்லாம் அவளிடத்தில் செல்லாதென்பதை அவன் உடனே உணர்ந்து கொண்டான். ஆனாலும், அவளைத் தன்னாலியன்ற வரையில் சமாதானப்படுத்தி அவளது உக்கிரத்தைத் தணித்து அனுப்ப வேண்டுமென்ற நினைவைக் கொண்டவனாய், அவன் அவளைப் பார்த்து வேடிக்கையாக நகைத்து, "ஆம்! நீ சொல்வது வாஸ்தவமான சங்கதிதான். தற்செயலாக நடக்கும் சங்கதியும், வேண்டுமென்றே செய்யப்படும் சங்கதியும் நன்றாகத் தெரிந்து போகும். ஆனால், இதில் இரண்டும் கலப்பாக இருக்கிறது. தற் செயலாக நடந்தது பெரும்பாகம்; வேண்டுமென்றே செய்தது சொற்ப பாகம். தற்செயலாக நடந்ததைத் தள்ளிவிட்டுப் பார்த் தால் நீ இவ்வளவு அதிகமாக கோபித்துக் கொள்ள இடமே