பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

செளந்தர கோகிலம்



போலத் தோன்றி அவனது மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தன. ரோஜாப்பூவை சுற்றிலும் முள்கள் நிறைந்திருப்பதுபோல, உண்மையான காதலனும், காதலியும் சேருவதற்கு எத்தனையோ இடையூறுகளும், இடைஞ்சலும் தோன்றுவதே உலக இயற்கை என்பதும், அப்படிப்பட்ட பிரயாசையின் மேல், ஒரு வஸ்து கிடைக்குமாயின் அதற்கு மதிப்பு அதிகம் என்பதும், அதனி டத்தில் நமது பிரியமும், மனமும் நீடித்து நிற்கும் என்பதும் கண்ணபிரானுக்குத் தெரிந்த விஷயங்கள், ஆனாலும் அந்தச் சமயத்தில் அந்த இடைஞ்சல்களை சகிப்பது மகா துர்லபமான தாக இருந்தது. கோகிலாம்பாள் தன்னைக் கலியாணம் செய்து கொள்ளப்போகிறாள் என்ற ஒரு நிச்சயம் ஏற்படுவதற்குள், தான் இரண்டு முறை தனது உயிரை மதிக்காமல் இரண்டு பெருத்த அபாயங்களை நிவர்த்திக்க வேண்டியிருந்ததையும், அவளை முதன் முதல் தான் தொடுவதற்கு முன், அதைக் கெடுத்து தங்க ளைக் கரைகடந்த சஞ்சலத்தில் ஆழ்த்த செளந்தரவல்லி திடீ ரென்று தோன்றியதையும், சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, அவனது மனதில் பலவிதமான எண்ணங்களும், கவலைகளும் எழுந்து வருத்தலாயின. அந்த விஷயத்தில் பிள்ளையார் சுழி போடுவ தற்குள் அத்தனை துன்பங்கள் நேர்ந்ததிலிருந்து, இனி நிச்சய தார்த்தம், கலியாணம் முதலிய முடிபுச் சடங்குகள் நிறைவேறு வதற்குள், இன்னமும் என்னென்ன இடர்களும், இடிகளும் வந்து குறுக்கிடுமோ என்ற விலக்கவொண்ணாத ஒரு கவலையும் சஞ்சலமும் இடையிடையே தோன்றி அவனை வதைத்துக் கொண்டிருந்தன. இரண்டு மடந்தையரும் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட ஒரே தோற்றமுள்ள இரண்டு சித்திரப் பாவைகள் போல இருந்தாலும், நற்குணமும், நன்னடத்தை, ஆழ்ந்த ஞானம், நாகரீகம், கண்ணிய புத்தி முதலிய அம்சங்களில் இரண்டு பெண்களுக்கும் கொஞ்சமேனும் ஒற்றுமையே இல்லையென்பது பட்டப்பகல் போல நன்றாகத் தெரிந்தது. ஒரே மரத்தில் காய்த்துப் பழுத்தது போல இருக்கும் மாங்கனிகளுள் ஒன்று புளிப்பாகவும், ஒன்று புழுக்கள் உள்ளதாகவும், ஒன்று அமிர்தம்போல இனிப்பதாகவும் இருப்பதுபோல, மனித சிருஷ்டியிலும், முகத்தழகு நிறைந்திருந்தும், அகத்தழகு