பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் is 7

பேசிக் கொள்ளச் செய்தவனாய், எல்லோர் மனதையும் கவர்ந்த காந்தம்போல நடுநாயகமாக இனிது வீற்றிருந்தான். அவ்வளவு கம்பீரமும், அழகும் பெற்றிருந்தாலும் பெரியோர்கள் இருப் பதைக் கருதி, அவன் அடங்கி ஒடுங்கி மரியாதையாக ஒரு பக்கத் தில் உட்கார்ந்திருந்த விதரனையே அவனது விஷயத்தில் எல்லோரும் ஒருவித வாஞ்சை கொண்டு, அவனைத் தங்களது சொந்தக் குழந்தைபோல பாவிக்கும்படி செய்து எல்லோரது மனத்தையும் வசீகரித்து விட்டது. கர்னாமிருதமாக இனிமையாக வீசிக்கொண்டிந்த மேளம், பாண்டு முதலியவற்றிலாவது, மற்ற அலங்காரங்களிலாவது அந்த ஜனங்களது மனம் செல்லாமல், கண்ணபிரானை இமை கொட்டாது பார்ப்பதிலும், அவனது வரலாற்றைப் பற்றியும், அவனது குண விசேஷங்களைப் பற்றியும் பேசுவதிலும் அவர்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி இருந்தனர். கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரான சுந்தரமூர்த்தி முதலியாரும் ஆடம்பரமான அலங்காரங்களுடன் வந்து கண்ணபிரானுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார். அவரும் அவனுக்கு அருகில் இருந்த வேறு சிலரும் அவனோடு சந்தோஷமாகப் பேசிப் பரிகாசஞ் செய்து கொண்டிருந்தனர். அவன் அதிகமாகப் பேசாமல் மிருதுவாக இரண்டொரு வார்த் தைகளை அப்போதைக்கப்போது சொல்லி மகிழ்ச்சியே வடி வெடுத்தது எனும்படி சந்தோஷமாகப் புன்னகை செய்தபோ தெல்லாம் அவனது கன்னங்கள் குழிந்ததும், முத்தைப்போல இருந்த அவனது பல்வரிசையில் சிறிதளது வெளியில் தெரிந்ததும், அவனது நெற்றியில் இருந்த கருஞ்சாந்துத் திலகத்தின் ஒளியும், வைரக் கடுக்கன்களின் டாலும் ஒன்று கூடி, ஆண் பெண் பாலரான எல்லோரது உயிரையும் கொள்ளை கொண்டு, எல்லோரது மனத்தையும் புண்படுத்தி சஞ்சலத்திற்குள்ளாக்கின. அவ்வாறு கொட்டகைப் பந்தலில் கூடியிருந்த ஜனங்களது கண்களுக்கும், மனத்திற்கும் தெவிட்டாத விருந்தாக கண்ண பிரான் வீற்றிருக்க, உட்புறத்தில் ஸ்திரீகளுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்த ஒரு மணிமண்டபத்தில் அதியற்புதமாக அமைக்கப் பட்டிருந்த முத்துப் பந்தலின் கீழே தங்க மனையின் மேல் கோகிலாம்பாள் தகத்தகாயமான ஆடை ஆபரணங்களையும், புஷ்பங்களையும் அணிந்து, ஜெகஜ்ஜோதியாய்க் கோடி சூரியப்