பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

செளந்தர கோகிலம்



பிரகாசமாக வீற்றிருந்தாள். அவள் நாணித் தலைகுனிந்து நற்குணமும், உத்தம லக்ஷணங்களும், சுந்தரமும் வடிவெடுத்து அவ ளது ரூபமாக வந்தனவோவென எல்லோரும் பிரமித்து மயங்கத் தகுந்த அபரிமிதமான வசீகரம் வாய்ந்த அதி ரமணிய அப்ஸர ஸ்தரீயாக வீற்றிருந்தாள். அவளைச் சுற்றிலும் சுமார் ஐந்நூறு ஸ்திரீகள் சூழ்ந்து

'மானினம் வருவபோன்றும் மயிலினம் திரிவ போன்றும்

மீனினம் மிளிர்வ போன்றும், மின்னினம் மிடைவ போன்றும், தேனினம் புலம்பி யார்ப்பச் சிலம்பினம் புலம்ப வெங்கும் பூகனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்" என்றபடி எல்லா ஸ்திரிகளும் கலியானப் பெண்களைப் போல அதியுன்னதமான ஆடையாபரணங்களை அணிந்து எல்லோரும் கந்தருவலோகத்துப் பெண்மணிகள் போலத் தோன்றிக் கண் கொள்ளா அதிசயக் காrயாக விளங்கினார்கள். கோகிலாம் பாளுக்குச் சமீபத்தில் இருந்த ஸ்திரீகள் குயில்போல மங்கள கீதம் பாட, வேறு சிலர் அந்தத் தோகை மயிலுக்கு திருஷ்டி தோஷம் கழித்து நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். பூஞ்சோலை யம்மாள், கற்பகவல்லியம்மாள் ஆகிய இருவரும் வைதவ்ய மடைந்தவர்களாதலால் அவர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றபடி கோகிலாம்பாள் வீற்றிருந்த கோலாகலக் காட்சியைக் கண்டு மனங்கொள்ள மகிழ்ச்சியும், ஆநந்தப் பெருக்குமடைந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவராய், இன்பசாகரத்தில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தனர். அவ்வளவு பெரிய கும்பலில் செளந்தரவல்லியம்மாள் ஒருத்தி மாத்திரம் எங்கும் காணப் படவில்லை. யெளவன மங்கையரான பத்துப் பதினைந்து வடிவழகிகள் மிகுந்த மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்தவராய்த் தோன்றி கோகிலாம்பாளுக்கு நலங்கு வைக்கும் வைபவத்தை அதிவிமரிசையாக நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுள் கோவிந்தபுரத்து ஜெமீந்தாரது புத்திரியான புஷ்பாவதியும், ஒரு பெருத்த பட்டத்து ராணிபோல சர்வாபரண பூவிதையாக வந்திருந்து, கோகிலத்வனியோ, புல்லாங்குழலின் ஒலியோ, பாகோ, தேனோ, அமிர்தமோவெனத் தனது தீங்குரலை எடுத்துக் கர்னாமிருதமாக நலங்கு, லாலி, ஊஞ்சல், ஒடம், ஜாவளி