பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 213

வழியில் பயம். இந்தக் குற்றத்தை நாங்கள் செய்யவில்லை. ஆகையால், எங்களுக்குக் கொஞ்சமும் பயமில்லை, எங்கே வேண்டுமானாலும் வந்துசொல்லிக் கொள்ளுகிறோம்' என்று வற்புறுத்திக் கூறியவண்ணம், எதிரில் போய் நின்று கண்ண பிரானை விடாமல் இறுகப் பிடித்துக்கொண்டவளாய், ஐயோ! என் மகனே! என் செல்வமே ஈசுரவன் உன்னை நல்ல பதவியில் வைக்கப் போகிறான் என்று நினைத்து நினைத்து மன மகிழ்ந்தி ருந்தேனே! மகா லக்ஷ்மிக்குச் சமானமான இந்தக் குழந்தையும் நீயுமாக இருக்கும் மணக்கோலத்தைப் பார்த்து ஆனந்தம் அடைய எண்ணினேனே! நான் மகா பாவி! இந்தப் பரம விகாரமான கோலத்தைக் காணவா நாம் இங்கே வந்தோம்! ஐயோ தெய்வமே இப்படியும் சதி செய்வாயா ஆகா! என் வயிறு பற்றி எறிகிறதே!” என்று கூறிப் பலவாறு பிரலாபித்துக் கல்லுங் கரைந்து உருகும்படி கதறியழத் தொடங்கவே அங்கிருந்த பூஞ்சோலையம்மாளும் மற்றப் பெண் பிள்ளைகள் யாவரும் அந்த மகா பரிதாபகரமான காட்சியைக் காணமாட் டாமல் தங்களது முகங்களை மூடிக்கொண்டு விம்மி விம்மித் திணறித் திணறி அழத் தொடங்கினர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகவல்லியம் மாளைப் பார்த்து, 'அம்மா! நீங்கள்! இப்படிச் செய்வது சரியல்ல. எங்களுக்கு நேரமாகிறது. வாரண்டில் பிடித்த பிறகு; இவரை விட எங்களுக்கு அதிகாரமில்லை. நகர்ந்து கொள்ளுங் கள். தடுக்க வேண்டாம்” என்று அதட்டிக் கூறியவண்ணம், கண்ணபிரானை வற்புறுத்தி அழைக்க, அப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாத நிலைமையில் குழம்பிக் கலங்கிப் பதறி அவமானத்தினால் குன்றிப் போய் நின்ற கண்ண பிரான் தனது தாயைப் பார்த்து, 'அம்மா! நீங்கள் பயப்பட வேண்டாம்; நகர்ந்து கொள்ளுங்கள். இவர்கள் என்னைக் கொண்டு போவதனாலேயே எனக்கு உடனே தண்டனை கிடைத்து விடப்போகிறதில்லை. நாம் எவ்விதக் குற்றமும் செய்ய வில்லை, நமக்கு சுவாமி எப்படியும் உதவி செய்வார். இத்தனை ஜனங்களுக்கு முன் எனக்கு அவமானம் வந்துவிட்டது. இனி இவர்கள் விலங்கை எடுத்து விடுவதனாலேயே, இந்த அவமானம் நீங்கி விடப்போகிறதில்லை. இவர் என்னை எப்படியாவது