பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

செளந்தர கோகிலம்



பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையானது என்றே நம்பிய கண்ணபிரான் மிகுந்த நன்றியறிதலையும், மரியாதையையும் தோற்றுவித்தவனாய் அவரை நோக்கி, "என் விஷயத்தில் தங்களுக்கு இவ்வளவு அன்பும் அநுதாபமும் ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்தக் குற்றத்தை நான் செய்ய வில்லை என்பதைத் தாங்கள் நிச்சயப்படுத்திக் கொண்டதாகச் சொல்வதைக் கேட்க, என்னுடைய பசி, தாகம், துயரம், அவ மானம் எல்லாம் நீங்கிப்போனதுபோல என் மனம் நிரம்பவும் குளிர்ந்து போய்விட்டது. தாங்கள் என் விஷயத்தில் அனுதாப மும், இரக்கமும் கொண்டு இவ்வளவு தூரம் உபசாரம் செய்யும் போது அதை நான் மறுப்பது ஒழுங்கல்ல. தங்களுடைய பிரியப் படி நான் இன்னமும் கொஞ்சநேரம் கழித்துச் சாப்பிடுகிறேன். இருந்தாலும் என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தத் திருட்டின் விவரங்களையும், எந்த அனுமானத்தின் மேல் போலீஸ் கமிஷனரும், மாஜிஸ்டிரேட்டும் என்னுடைய வீட்டைத் திறந்து சோதனை போட்டார்கள் என்பதையும் தங்களுடைய வாக்கின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆவல் கொள்ளுகிறது. தாங்கள் அதையெல்லாம் தெரிவித்தால் அது பெருத்த உதவியாக இருக்கும்’ என்றான்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் அன்பினால் மலர்ந்த முகத்தோடு கண்ணபிரானை நோக்கி, 'அந்த விவரத்தை எல்லாம் நான்தான் இன்றையதினம் காலையில் உம்மைப் பிடிக்கும்போதே சொன்னேனே! அதைத் தவிர வேறே எந்த விவரமும் எனக்கு இப்போது நிச்சயமாகத் தெரியவில்லை. உம்முடைய வீட்டில் அந்தத் திருட்டு சாமான்கள் இருக்கின்றன என்னும் சங்கதி கமிஷனருக்கு எப்படித் தெரிந்தது என்பது எனக்கு இன்னமும் தெரியாது. அந்தச் சங்கதி உமக்கு அவசியம் தெரிய வேண்டுமானால் நான் நாளையதினம் காலையில் இங்கே மறுபடியும் வரும்போது தெரிவிக்கிறேன். இன்று காலையில் உம்மைப் பிடித்தவுடனே உம்மை நேராக ஜெயிலுக்குக் கொண்டுபோய் அடைக்க வேண்டியது எங்களுடைய கடமை. ஆனால், எங்களுடைய விசாரணை அரைகுறையாக இருந்தால், குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்பாமல் 24 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கலாம் என்று சட்டம் இடம்