பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

செளந்தர கோகிலம்



தரையில் ஒரு நாகப்பாம்பு வந்து படுத்திருந்தது. அதைக்கண்ட நான் பதறிப்போய்விட்டேன். ஆனால், நான் கூச்சலிட்டு அவளை எச்சரித்தால் அவள் திடுக்கிட்டெழுந்து அந்த நாகத்தின்மேல் காலை வைத்து விடுவாளோ என்ற பயம் என் மனதில் உண் டாயிற்று. ஆகையால் நான் சந்தடி செய்யாமல் விரல்களால் நடந்து, அவளுக்குத் தெரியாமல் ஊஞ்சல் பலகையண்டை போய், திடீரென்று அவளை அலாக்காகத் துரக்கிக்கொண்டுவந்து தூரத்தில்விட்டு, அந்தப் பாம்பைக் காட்டினேன். அவள் உடனே பயந்து மயங்கிக்கீழே விழுந்துவிட்டாள். நான் அந்தப் பாம்பை அடித்துப் போட்டுவிட்டு வந்து, அவளுடைய மயக்கத்தைத் தெளிய வைத்து அவளிடத்தில் கொஞ்சநேரம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்து அவளைப் பங்களாவுக்கு அனுப்பினேன். நான் இரண்டு தடவை அவளுடைய உயிரைக் காப்பாற்றினேன் என்கிற நன்றியை அவள் ஒரு நாளும் மறக்கமாட்டாள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவள் என்னைத் தவிர வேறே யாரையும் கட்டிக் கொள்ளுகிறதில்லை என்ற ஒரே தீர் மானத்தைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஆகையால் அவள் இந்தச் சமயத்தில் என்னைவிட்டு விடமாட்டாள் என்றே நான் நம்புகிறேன்.

இன்ஸ்பெக்டர் : அப்படியானால், நீர் அதிர்ஷ்டசாலி தான். ஈசுவரன் உமக்கும் அந்தப் பெண்ணுக்கும் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறான் போலிருக்கிறது. அதை நிறைவேற்றி வைக்கும் பொருட்டே அவளுக்கு அந்த இரண்டு அபாயங்களும் நேர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்; இனி பயமில்லை. பணத்தை வாரி இறைத்து நல்ல முதல் தரமான பாரிஸ்டரை வைத்து வாதாடினால், இந்த வழக்கு பஞ்சு பஞ்சாகப் பறந்து போகும்; நீரும் உடனே இந்தக் கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம்.

கண்ணபிரான் : தெய்வத்தின் அருள் எப்படி இருக்கி றதோ பார்க்கலாம். பெருத்த இரண்டு விபத்துகளைக் கொண்டு வந்து விட்டு எனக்கும் அவளுக்கும் பழக்கத்தையும் பிரியத் தையும் உண்டாக்கி வைத்துவரும் கடவுள்தான் இப்போது இந்த அபாண்டமான இடியை என் தலைக்குக்கொண்டுவந்து வைத்து, அந்தக் கலியாணம் நடக்காமல் தடுத்து இருக்கிறவரும் அந்தக்