பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு So

போய் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, கந்தசாமி முதலியாரு டைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு ஒருமணி நேரம் கழிந்தது. அப்போதும் கந்தசாமி முதலியார் திரும்பி வரவில்லை. அதற்குள் போலீசாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. அந்த வீட்டின் சொந்தக்காரர் யார் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு அவரிடத்தில் போய்க் கேட்டு கந்தசாமி முதலியாருக்கு என்ன தொழில், அல்லது, உத்தியோகம் என்பதை அறிந்து கொண்டால், அவர் போயிருக் கும் இடத்தை அறிந்துகொள்ள அநுகூலப்படு மென்று நினைத் தவர்களாய் அந்த வீடு யாருடையது என்பதை விசாரிக்க, அது பக்கத்துத் தெருவிலிருந்த நம்பெருமாள் செட்டியார் என்ற ஒரு வர்த்தகருடைய வீடு என்பது தெரிந்தது. உடனே ஒரு சப் இன்ஸ்பெக்டரும் சில ஜெவான்களும் ஒரு தபால் இன்ஸ்பெக் டரும் நம்பெருமாள் செட்டியாருடைய வீட்டுக்குப் போய் அவரை விசாரிக்க, அவர், 'ஐயா, அந்த வீடு ஒரு மாச காலமாகக் காலியாக இருந்தது. நேற்றைக்கு முந்திய நாள் ஒருவர் வந்து, தாம், கோயம்புத்துாரிலுள்ள ஒரு பெரிய மிராசுதாரென்றும், தம்முடைய பெயர் கோபாலகிருஷ்ணப் பிள்ளை என்றும், தாம் மூன்று நாள்கள் வரையில் தங்கியிருந்து பட்டணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றும் சொல்லி, அதற்காகப் பதினைந்து ரூபாய் வாடகை கொடுத்தார். அவர் இன்று சாயங்கால ரயிலில் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஏதோ அவசரமான ஒரு தந்தி வந்தது என்று சொல்லி இன்றைய தினம் காலையிலேயே அவர் போய்விட்டாராம். வீட்டின் திறவுகோலை ஓர் ஆள் கொண்டுவந்து என்னிடத்தில் கொடுத்துவிட்டுப் போனான் என்று சொன்னார். அந்த வரலாற்றைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டின் திறவு கோலுடன் செட்டியாரை அழைத்துக்கொண்டு சைனாபஜார் தெருவில் இன்ஸ்பெக்டர் முதலியோர் இருந்த வீட்டண்டை வந்து சேர்ந்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நம் பெருமாள் செட்டியார் சொன்ன வரலாறுகளைக் கேட்கவே, அவரது மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டவருடைய பெயர் கோபால கிருஷ்ணப் பிள்ளை என்று செட்டியார் சொல்ல, மணியார்டரில் கந்தசாமி