பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 253

போய்த் தலை குப்புறப் பாதாளத்தில் விழுந்து சின்னா பின்னமாகத் தெறித்துப் போவது போன்ற கதி தங்களுக்கு வாய்த்ததே என்றும் எண்ணி எண்ணிக் கற்பகவல்லியம்மாள் வாயிலும் வயிற்றிலும் உரமாக மோதிக்கொண்டாள். அப்படிப் பட்ட அபாண்டமான பெருத்த திருட்டைத் தங்களின்மேல் சுமத்த, தங்களுக்கு அப்படிப்பட்ட பகைவன் யாராவது இருக்கி றானோ என்று அந்த அம்மாள் சிந்தித்து தனது மூளையை உடைத்துக்கொண்டு பார்க்கிறாள்; அப்படிப்பட்டவன் ஒருவனாவது இருப்பதாக அவளுக்குத் தெரியவேயில்லை. கடைசியாகத் தனது புதல்வன் சொன்னபடி, தாங்கள் சிலதினங்களாக வீட்டில் இல்லாத காலத்தில், யாரோ அந்தத் திருட்டுச் சாமான்களைக் கொணர்ந்து தங்களது வீட்டிற்குள் புதைத்திருக்க வேண்டும் என்ற உறுதியே வந்து வந்து மேலாடியது. தங்களுக்குப் பகைவர் எவருமில்லை. ஆகையால் போலீஸாரே அப்படிச் செய்திருக்கவேண்டும் என்ற முடிவான எண்ணமே உண்டாயிற்று. தான் இனி அந்தப் பங்களாவில் இருப்பது தவறு என்றும், அதனால் பூஞ்சோலை அம்மாள் முதலியோருக்கு இழிவும் அவமானமும் ஏற்படும் என்றும், அவர்கள் தன்னை அவ்விடத்தைவிட்டு அனுப்புவதற்குமுன், தானே புறப்பட்டுப்போவதே மரியாதை என்றும், தான் உடனே தனது ஜாகைக்குப்போய்த் தனக்குப் பழக்கமான மனிதர்களைக் கொண்டு ஒரு வக்கீல் அமர்த்திக் கண்ணபிரானை விடுவித்துக் கொண்டு இந்தப் பாழும் பட்டணத்தைவிட்டே எங்ககேயாவது கண்காணாத வெளியூருக்குப் போய் விடுவது என்றும், கற்பகவல்லியம்மாள் பலவாறு முடிவுசெய்து கொண்டவளாய் மனமாழ்கித் தளர்வடைந்து சோர்ந்து தத்தளித்துக்கிடக்க, பக்கத்தில் இருந்த இரண்டொரு பெண் பிள்ளைகள் பொதுப் படையான வேதாந்தம் பேசி, ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சொன்ன மொழிகளுள் எதையும் கற்பகவல்லி பம்மாள் செவியில் வாங்காமல், சகிக்க இயலாத மகா வேதனை யான நிலைமையில் கிடந்து சித்திரவதைப் பட்டுக்கொண் டிருந்தாள். அங்ங்ணம் நிலைமை அப்படி இருக்க, கோகிலாம் பாளது நிலைமையை இனி கவனிப்போம்: அந்தத் தோகை மடமயிலாள், சோர்ந்து துவண்டு மயங்கிக்கிடந்த அந்தப்