பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

செளந்தர கோகிலம்



புரத்தில், சுமார் இருநூறு ஸ்திரீகள் கூடி விசனித்துக் கண்ணிர் விட்டு அழுது, பெருத்த துக்ககரமான மரணம் நேர்ந்த இடத்தில் கூடி இருப்போர்போல அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக உட்கார்ந்திருந்தனர். பூஞ்சோலையம்மாளும், புஷ்பாவதியும் வேறு நாலைந்து உறவினருமே கோகிலாம்பாள் படுத்திருந்த கட்டிலைச் சுற்றிலும் இருந்து அவளைத் தெளிவிப்பதற்குத் தேவையான உபசரணைகள் செய்து கொண்டிருந்தனர். முன் விவரிக்கப்பட்டபடி அவர்கள் கோகிலாம்பாளுக்குப் பலவித மான சைத்தியோபசாரம் செய்யச் செய்ய, அவளது மயக்கம் தெளிவடைந்தது. அவள் தனது கைகால்களையெல்லாம் நகர்த்தவும், உடம்பை அப்புறம் இப்புறம் திருப்பவும் ஆரம்பித் தாள். அவளது மூச்சு திரும்பாமலேயே நின்று போய்விடுமோ என்றும், அவள் அப்படியே இறந்துபோய்விடப்போகிறாளே என் றும், அளவில் அடங்காப் பெருங்கவலையும் கலக்கமும், திகிலும் அடைந் திருந்தனர். ஆதலால், அவ்வாறு அவளது அங்கங்கள் அசைந்ததைக் காண எல்லோரும் கரைகடந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தவர்களாய் அவள் கண்ணைத்திறந்து கொண்டு எப்போது எழுந்து உட்காரப்போகிறாள் என்று மிகுந்த ஆவ லோடு எதிர்பார்த்து அவளது முகத்தையே இமை கொட்டாமல் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர்.

அவ்வாறு அரைநாழிகை நேரம் கழிந்தது. கோகிலாம்பாள் தனது கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள். பார்க்கவே, அந்த இடத்தில் ஏராளமான ஜனங்கள் நிறைந்து இருந்ததைக் கண்டு, சகிக்க இயலாத வெட்கமும் அவமானமும் அடைந்து, எவரையும் பார்க்கமாட்டாமல் உடனே தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள். இந்த உலகமே தன்னைப் பார்த்து ஏளனம் செய்து அவமதிப்பது போலவும், அங்கிருந்தோர் அனைவரும் தன்னைப்பார்த்துப் புரளிசெய்து நகைப்பது போலவும் அவளது மனதில் ஒர் எண்ணம் உண்டாயிற்று; ஆகவே, அவளது சரீரம் குன்றியது; உயிர் தள்ளாடியது; அவள் தனது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தாள். ஆனாலும், அவளது அகக் கண்ணிற் கெதிரில் கண்ணபிரானது சுந்தரவடிவமே நீங்காமல் நின்று தாண்டவமாடிக்கொண்டிருந்தது; மகா அற்புதமான கலியாணக் கோலத்தோடு, ஒரு பெருத்த மண்டலேசுவரனது செல்வக்