பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 255

குமாரனான யுவராஜன் நிற்பதுபோல அழகே நிறைவாகத் தோன்றிய அந்த மன்மத புருஷனும் தானும் பூஞ்சோலையில் மணலின்மேல் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அணைந்து ஆலிங் கனம் செய்திருந்த காட்சி அவளது மனத்தைவிட்டு விலகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தமையால், கோகிலாம்பாள் தனது கண்ணைத் திறக்காமல், அந்த ஆனந்தக்காட்சியிலேயே தனது மனத்தை லயிக்க விட்டவளாய் உலகத்தை மறந்து சிறிதுநேரம் மெளனமாக அசைவற்றுப் படுத்திருந்தாள். அவ்வாறு அரைநாழிகை நேரம் கழிந்தது. அவளது அகக் கண்ணிலிருந்த உத்தியானவனத்துப் புதுமோகக் காட்சி சிறுகச்சிறுக மாறிக் கண்ணபிரானைப் போலீசார் விலங்கிட்டுப் பிடித்துக் கொண்டு போன மகா பயங்கரமான காட்சியாகத் தோன்றியது. மங்களகர மான நிச்சயதார்த்தச் சடங்கு நடக்கும் நல்ல சந்தர்ப்பத்தில், சகல மான ஜனங்களுக்கும் நடுவில், தனது பிராணநாதனும், உயிர் நிலையுமான கண்ணபிரானைப் போலீசார் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்ற நினைவும் விசனமும் காட்டாற்று வெள்ளம்போலப் பொங்கிப் பொங்கி மகா உக்கிரமாக எழுந்து அவளை வதைக்க ஆரம்பித்தன; தானும், கண்ணபிரானும் முதன் முதலாகத் தொட்டு ஆலிங்கனம் செய்து பேராநந்த சுகம் அநுபவித்திருந்த காலத்தில், அதற்கு இடையூறாக செளந்தரவல்லி அங்கே திடீரென்று தோன்றி தங்களது சந்தோஷத்தையெல்லாம் தரைமட்டமாக விசனக்கடலில் ஆழ்த்தியபோதே, அது கோகிலாம்பாளது மனதிற்கு ஒர் அபசகுனமாகத் தோன்றியது; அதிலிருந்து அவளது மனதில் பலவகையான சந்தேகங்களும் கவலைகளும் தோன்றி மனதைப் புண்படுத்திக் கொண்டிருந்தன. தங்களது கலியாணம் கடைசிவரையில் நிர்விக்கினமாக முடிய வேண்டுமே என்றும், தானும் தனது ஆசை மணாளனும் கூடிக் கலந்து சந்தோஷமாக வாழவேண்டுமே என்றும் நினைத்து, அந்த விஷயத்தில் மிகுந்த கவலை கொண்டிருந்தாள். ஆதலால், இப் போது நேர்ந்த பேரிடரானது அவளால் ஒரு சிறிது எதிர்பார்க்கப் பட்டதாகவே இருந்ததனாலும், அது அவளால் சகிக்கக்கூடிய வரம்பை முற்றிலும் மீறிய மகாபிரமாதமான பொல்லாங்காகத் தோன்றியது. ஆகவே, வேடனது மகா கூர்மையான அம்பு ஹிருதயத்தில் ஊடுருவிப் பாயப்பெற்ற மணிப்புறா எவ்வாறு