பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 265

பொதுவான உலக நியாயத்தை எடுத்துப் போகிறவள் போலவும் மொழிந்தாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள், 'ஆம் அம்மா! நீங்கள் சொல்லுகிறபடி சொந்தக்காரர்களுடைய உடத்திரவம் கொஞ்சம் ஏற்படும் என்பது உண்மைதான். அப்படி இருந்தாலும் நாம் நியாயமான காரியத்தையே செய்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி எடுத்துச் சொன்னால், அவர்களும் ஒப்புக்கொள்வார்கள். ஆரம்பத்தில் சொற்ப காலத்துக்கு அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும், உண்மை தெரியத் தெரிய காலக் கிரமத்தில், அவர்கள் திருந்தி விடுவார்கள் என் பதைப் பற்றி சந்தேகமே இல்லை. இப்போது நீங்கள்தான் இருக் கிறீர்கள். உங்களுடைய தமயனாருக்கு செளந்தரவல்லியைக் கட்டிக் கொடுக்க நிச்சயமாகி விடுகிறதாக வைத்துக் கொள்ளு வோம். நீங்கள் எந்தத் தவறையும் செய்யாத நல்ல யோக்கிய மான மனிதர்கள் என்பது எங்களுக்குச் சந்தேகமறத் தெரிந்தி ருக்கிறது. கிரகசாரத்தினால் திடீரென்று உங்களுக்கு எதிர்பாராத இடர் ஏதாவது வந்துவிட்டால், சொந்தக்காரர்கள் துஷிப்பார் களே என்று பயந்து நாங்கள் உங்களை விட்டுவிட முடியுமா? உங்களுக்கு அநியாயமாகத் துன்பம் சம்பவித்துவிட்டது ஆகையால், நாங்களும் பெண்ணைக் கொடுக்க முடியாது என்று சொல்வது நியாயமாகுமா? எப்போது நாம் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்துகொள்ளத் தீர்மானித்து விட்டோமோ, அப்போது எங்களுடைய நன்மை தீமைகளை நீங்கள் உங்க ளுடையவையாக மதிக்க வேண்டும் அதுபோலவே, நாங்களும் பரஸ்பரம் மதிக்க வேண்டும். அதுதான் நெருங்கிய பந்துக்களுக்கும் தூரத்தில் இருக்கும் ஜனங்களுக்கும் வித்தியாசம், ஒரு மனிதருக்கு அபாண்டமான ஒர் அவமானம் நேர்ந்துவிட்டால் துார பந்துக்கள் உண்மையை அறிந்துகொள்ளாமல் அப்படித்தான் ஏளனம் செய்து இழிவுபடுத்தி, கிணற்றில் விழுந்தவனுக்கு மேல் கல்லைப்போட்டு உள்ளே ஆழ்த்துவதுபோல, இன்னமும் அதிகரித்த துன்பத்தில் ஆழ்த்தி அவன் தலையெடுக்காதபடி அடிப்பார்கள். உண்மையான பிரியமும், உருக்கமும் உடைய நெருங்கிய பந்துக்கள், பிறருடைய பழிப்பைத் திரணமாவது மதிக்காமல், தங்களாலான உதவியைச் செய்து, தாம் கைதுக்கி