பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 289

இப்படிப்பட்ட அருமையான மனிதர்களுடைய சிநேகம் இருக் கையில், எங்களுக்கு எப்பேர்ப்பட்ட கெடுதல் நேர்ந்தாலும், அது சூரியனுக்கு முன் இருள் விலகுவதுபோல ஒரு நிமிஷத்தில் விலகிப்போய்விடும். என்னவோ நாங்கள் பூர்வஜென்மத்தில் செய்த பூஜாபலன்தான் உங்களுடைய சிநேகம் இந்தச் சந்தர்ப் பத்தில் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது' என்று நிரம்பவும் வாத்சல்யமாகவும் உருக்கமாகவும் கூறினாள்.

உடனே புஷ்பாவதி அவ்விடத்தைவிட்டு வெளியிற் சென்று கால் நாழிகை நேரம் வரையில் தனது அண்ணனோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுபடியும் திரும்பி கோகிலாம்பாளிடத் திற்கு வந்து சேர்ந்தாள். அதற்குள் கோகிலாம்பாள் நன்றாகத் தெளிவடைந்து எழுந்து ஒரு லோபாவின்மீது உட்கார்ந்து கண்ணபிரானை நினைத்து நினைத்து வருந்தி உருகிக்கொண்டி ருந்தாள். அவள், புஷ்பாவதி திரும்பி வந்ததைக் கண்டு, தனது விசனக் குறிகளை ஒருவாறு மறைத்துக்கொண்டு அவளிடத்தில் பிரியமாகப் பேசத் தொடங்கி, “என்ன சமாசாரம்? உங்களு டைய தமயனார் இருக்கிறார்களா போய்விட்டார்களா? சங்கதி களை எல்லாம் சொன்னிர்களா? அவர்கள் என்ன பதில் சொன் னார்கள்?' என்று வினவ, புஷ்பாவதி மிகுந்த வாத்சல்யத்தோடு பேசத் தொடங்கி, 'அவர் என்னிடத்தில் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்று நினைத்தாராம். அதற்குள் நான் போய்ச் சேர்ந்தேன். அவரும், நாம் நினைப்பதுபோலவே நினைக்கிறார். இது போலீசாரால் கொண்டுவரப்பட்ட கற்பனைக் குற்றம் என்றும், கண்ணபிரான் இதைச் செய்திருக்கமாட்டார் என்றுமே அவர் அபிப்பிராயப்படுவதன்றி, இதற்குத் தக்க திறமை வாய்ந்த ஒரு வக்கீலை அமர்த்தி வாதாடினால், அவர் விடுதலைபெற்று விடுவார் என்றும் சொல்லுகிறார். அவருக்கு ஒரு பிரபலமான வக்கீலைத் தெரியுமாம். நீங்கள் அநுமதி கொடுத்தால், அவர் அந்த வக்கீலை அமர்த்தி, தக்க நடவடிக்கைகள் நடத்தச் செய்வ தாகவும் சொன்னார். செளந்தரவல்லியின் கலியாண விஷயத்தில் நீ சொன்ன சங்கதியை நான் அவரிடத்தில் வெளியிட்டேன். அவர் அதுதான் நியாயமான காரியமென்று ஒப்புக்கொண்டார்”

என்று அன்பொழுகப் பேசினாள்.