பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 11

தோல் பையும், ஏராளமான கடிதங்களும் மணியார்டர் நமூனாக்களும் (பாரங்கள்) அந்த இடம் முழுதும் தாறுமாறாகக் கிடந்தன. அதைக்கண்ட யாவரும் அளவற்ற திகைப்பும், வியப்பும், பிரமிப்புமடைந்து அவனை உற்று நோக்கினார்கள். அவனுடைய மார்பு மாத்திரம் சொற்பமாக அசைந்து கொண்டி ருந்ததைக் கண்டு அவன் உயிரோடிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட சிலர் விரைவாகப் பாய்ந்து, அவனுடைய வாயிலிருந்த துணிப்பந்தையும் உடம்பிலிருந்த கட்டுகளையும் விலக்கினார்கள். வேறொருவன் பக்கத்திலிருந்த தண்ணிர் குழாயண்டை ஒடித் தனது வஸ்திரத்தைத் தண்ணில் நனைத்துக் கொண்டு வந்து தபால்காரனுடைய முகத்தில் ஒற்றினான். தபால் இலாகா இன்ஸ்பெக்டர்களும், சிப்பந்திகளும் அங்கே சிதறிக்கிடந்த மணியார்டர் நமூனாக்களையும் கடிதங்களையும் எடுத்து அடுக்கினார்கள். அவ்வாறு கால் நாழிகை நேரம் கழிய அந்தத் தபாற்காரன் கண்களைத் திறந்து பார்த்தான். அவனுடைய மயக்கம் தெளிவடைந்ததாகத் தோன்றியது. இருந் தாலும் அவன் அசையமாட்டாமல் அப்படியே கிடந்து தனக்குக் குடிக்கத் தண்ணிர் வேண்டுமென்று கையின் கட்டைவிரலால் சைகை செய்தான். உடனே ஒருவன் வெளியிலே போய் சோடாப்புட்டியொன்றைக் கொணர்ந்து உடைத்து அவனுடைய வாயில் வார்த்தான். அதன் பிறகு கால் நாழிகையில் அந்தத் தபால்காரன் களை தெளிந்து எழுந்து உட்கார்ந்து அப்புறம் இப்புறம் திரும்பித் தன்னிடத்திலிருந்த கடிதங்களையும், மணியார்டர் நமூனாக்களையும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போலீசாரையும் பார்த்து, ஆள்கள் அகப்பட்டார்களா? பணமெல்லாம் இருக்கிறதா?’ என்றான். அதைக் கேட்ட தபால் இலாகா இன்ஸ்பெக்டர், "அடே சொக்கலிங்கம்! என்னடா நடந் தது? யார் உன்னை இப்படிக் கட்டிப் போட்டது?’ என்றார்.

அதைக் கேட்ட தபாற் சேவகன் உடனே எழுந்து மரியாதை யாக நின்றுகொண்டு, 'இந்த வீட்டுக் கந்தசாமி முதலியாருக்குப் பத்து ரூபாய்க்கு மணியார்டர் வந்தது. நான் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு கந்தசாமி முதலியார் என்பது யார் என்று விசாரித்தேன். வாசல் திண்ணையில் ஒர் ஆள் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் ஒரு வேலைக்காரன் போல