பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 277

அப்பிடி இருந்தவ, திடீருனு இந்த நாலுநாளா எங்கிட்ட சொல்லாமெ இந்த ஊட்டுலெ வந்து நொளஞ்சிக்கினு இருக் இறா இவளோடெ மவனுக்கு இந்த ஊட்டுப் பெண்ணே கட் டப்போறாளாம். அதுக்காகவத்தான் நாம்ப இங்ங்னே வந்தது, அவளோடெ நாம்ப பேசல்லே, எசமானே பேசி, அவ என்ன சொல்றான்னு கேட்டுச் சொல்லிப்புடுங்க. அவ சேஞ்சி குடுத்த சத்தியப் பிரமானத்தெ நெறவேத்தப் போறாளா? இல்லாமெப் போனா, இந்தப் பாச்சாமியானெ இனிமேலே சுத்தமா மறந்து, தமிளப் பொம்புளெயாவே இருக்கப்போறாளா? எசமானே வெசாரிச்சுச் சொல்லிப்புடுங்க,” என்று கூறினான்.

அவன் கள் குடித்த வெறியினால் குழறிக் குழறி பேசினான் ஆனாலும், அவன் கற்பகவல்லியம்மாளைப் பார்த்துக் கொண்டே கணிர் கணிர் என்று உரக்கப் பேசினான் ஆகையால், அவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் கற்பகவல்லியம்மாளது செவியி லும் மற்றவர்களது செவியிலும் தெளிவாகப்பட்டன. அவன் பேசி முடிக்கவே, துரக்க மயக்கத்திலிருந்து சொப்பனம் காண்ட வள் போல உணர்வு கலங்கி மயங்கி தன்னைச் சமாளித்துக் கொள்ள மாட்டாமல் தத்தளித்திருக்க கற்பகவல்லியம்மாள் தனது கையை ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டு, "ஐயோ தெய்வமே! இதுவும் உன்னுடைய சோதனையா! இப்படிப்பட்ட மகா கேவலமான இழிவுக்கு ஆளாகவா நான் பெண்ணாய்ப் பிறந்தேன்! ஈசுவரா! என்னுடைய பிள்ளையின் தலைக்குக் கொண்டு வந்து வைத்த இடியோடு உன் மனம் திருப்தியடைய வில்லையா? என் தலைக்கும் இந்த அபாண்டமான பேரிடியைக் கொண்டு வந்து வைக்க எண்ணினாயா? ஆகா! என்ன ஜென்மம் எடுத்தேன்! என்ன பெண் பிறந்தேன்!” என்று வீரிட்டுக் கதறிய வண்ணம் நிலை தளர்ந்து வேரற்ற மரம்போல அப்படியே பின்புறத்தில் சாய்ந்து, நின்ற நிலையில் செங்கல் தரையின்மீது படேரென்று வீழ்ந்துவிட்டாள். அவளது சிரத்தின் பின்புறமும் முதுகும் சிதற தேங்காய் உடைபடுவதுபோலத் தடாரென்று தரை யில் போய் மொத்துண்டன. அந்த அம்மாளது கண்கள் உடனே மூடிக்கொண்டன. பேச்சு மூச்செல்லாம் அடைத்துப்போய் விட்டன. அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பூஞ் சோலையம்மாள், கோகிலாம்பாள், புஷ்பாவதி ஆகிய மூவரும்